Top News

PenDrive தொடர்பில் பொலிசில் முறைப்பாடு; றிசாத் அதிரடி




வில்பத்து Pen Drive விவகாரம் தொடர்பாக சிலோன் முஸ்லிம் அடுத்து நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வில்பத்து காடழிப்பு தொடர்பான படங்கள் அடங்கிய நுகர்வோர் அதிகார சபையின் பெயர் பொறிக்கப்பட்ட Pen Drive தொடர்பில் இன்று நுகர்வோர் அதிகாரசபை கொழும்பு கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் ‘சுரக்கிமு ஸ்ரீ லங்கா’ எனும் பெயரில் வில்பத்து காடழிப்புக்கு எதிராக இலங்கை மன்ற நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் வில்பத்து காடழிப்பு தொடர்பான படங்கள் அடங்கியுள்ளதாக தெரிவித்து இந்த Pen Drive உபகரணங்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous Post Next Post