பெப்ரவரி 4ம் திகதி வெளி நாட்டு ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டினை மீட்டெடுத்தமையாகும் இந்த நாட்டுக்கு கிடைத்த முதலாவது சுதந்திரமாகும். இரண்டாவது சுதந்திரமாக 2009ம் ஆண்டு மே 18ம் திகதி பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டினை மீட்டெடுத்தமை பார்க்கப்படுமிடத்து உள்ளூர், கொடுங்கோள் ஆட்சியாளர்களிடமிருந்து 2015 ஜனவரி 8ம் திகதி நாட்டினை மீட்டெடுத்தமை மூன்றாவது சுதந்திரமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் இந்த நாடு அடைந்த நான்காவது சுதந்திரதினமாகவும் இந்த நாட்டிற்கு கிடைத்த மற்றுமொரு விடுதலையாகவும் நேற்று 03.02.2017 இந்த நாட்டில் முடக்கப்பட்டிருந்த தகவல் அறியும் சுதந்திரத்திற்கு கிடைத்துள்ள சுதந்திரத்தினை பார்க்கலாம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடியில் நடாத்திய 69வது சுதந்திரதின நிகழ்வில் முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் மேற் கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தினை தெரிவித்த பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இந்த நாட்டில் குடி மக்களாகிய நாம் நமது பணம், வாக்குரிமை, எம்மால் வழங்கப்பட்ட அதிகாரம் போன்றவற்றினை ஒருவர் சரியாக பயண்படுதுகின்றாரா? அல்லது பிழையாக பயண்படுத்துகின்றாரா? என்பதனை நாங்கள் தெரிந்து கொள்ளதா வரைக்கும் எமது கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டே காணப்பட்டது. ஆனால் நேற்று 03.02.2017ம் திகதி அதற்கு விடுதலை கொடுக்கப்பட்டு தகவல் அறியும் சட்டம் அமுலுக்கு வந்துள்ளமையானது இந்த நாட்டுக்கு கிடைதுள்ள நான்காவது சுதந்திரமாக பார்க்கப்பட வேண்டும். இதனை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் 1949ம் ஆண்டு தமிழில் சுதந்திர கீதம் பாடப்பட்டதற்கு பிறகு மீண்டும் தமிழில் எமது நாட்டு சுதந்திர கீதத்தினை பாடுவதற்கு 66 வருடங்கள் போராட வேண்டி ஏற்பட்டது.
கடந்த அரசாங்கங்களிலே வட கிழக்கில் தமிழில் தேசிய கீதத்தினை பாடப்பட்ட விடயங்கள் தேச துரோகமாக பார்க்கப்பட்டு வந்ததனை நாம் எல்லோரும் அறிவோம். ஆகவே 66 வருடங்கள் போராடித்தான் தமிழில் நாங்கள் சுதந்திர கீதத்தினை பாட வேண்டிய நிலைமை இருந்தது என்பது யதார்த்த பூர்வமான விடயமாகும். இவ்வாறான சுதந்திரங்களை பற்றி நான் கூறுவதற்காகன முக்கிய காரணம் இந்த நல்லாட்சியில் ஓரிரு நல்ல விடயங்களும் நடந்திருக்கின்றன என்பதனை இந்த சுதந்திர தின நிகழ்வில் சுட்டிக்காட்டுவதே ஆகும்.
அந்த வகையிலே தகவல் அறியும் சட்டமானது இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட விடயமாகும். ஆகவே இந்த நல்லாட்சியில் எதுவுமே நடக்கவில்லை என நாங்கள் கூறிவிட முடியாது. ஆனால் இந்த நல்லாட்சியில் நல்ல ஆரம்பங்கள் வெளியான நிலையிலே நல்ல முடிவுகளை இன்னும் காண கூடியதாக இல்லை என்பதே நாங்கள் கூறுகின்ற விடயமாக இருக்கின்றது. எனவே இந்த நாட்டிலே மீண்டும் ஒரு சுதந்திரத்திற்கான போராட்டமும் விடுதலைக்கான தேவையும் இருக்கத்தான் செய்கின்றது. எங்களை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்களால் நாடு சுரண்டப்படுவதிலிருந்தும், இந்த நாட்டின் சொத்துக்கள் கொல்லை அடிக்கப்படுவதிலிருந்தும், நமது உரிமைகள் நமக்கு தெரியாமல் நசுக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய தேவை நமக்கு முன்னே இருக்கின்றது.
கடந்த வாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலே ஒரு கட்சியின் தவிசாளர் கட்சிக்குள் இருந்து கொண்டு எல்லோரும் செய்த தில்லு முள்ளுகளுக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் கருத்தினை கூறியிருந்தார். அவர் கூறிய காரியங்கள் அனைத்தும் அசிங்கமானவையும், நாவினால் கூறவும் முடியாத காரியங்களாகும். அது மட்டுமல்லாமல் குறித்த தொலைக்காட்சி நிகழ்சியிலே நெஞ்சினை நிமிர்த்தி கடந்த அரசாங்கத்தின் ஆட்சி மாற்றத்திற்காக தனது கட்சியின் தலைவர் காசு வாங்கினார். எனக்கும் ஒரு கோடி தந்தார் என தைரியமாக கூறினார். ஆகவே குறித்த வாக்கு மூலத்தின் பாரதூரத்தினை புரிந்து கொண்டால் நமது சமூகத்தின் எதிர்வினை எப்படியிருக்க வேண்டும்? இந்த இரண்டு பேரும் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு அவர்களுடைய வாழ் நாட்களிலே அருகதையற்றவர்கள் என்ற முடிவிற்கே சமூக வந்திருக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது தலைவரை பற்றி பேசக்கூடாது என்று ஒரு கூட்டமும், இன்னொருவர் ஊழல் செய்து விட்டு எவ்வாறு காட்டிக்கொடுக்க முடியும் என அறிக்கை விடுகின்றார். மறு பக்கத்திலே இரண்டு பேருமே சமூகத்திற்கு துரோகம் செய்திருக்கின்றார்கள் எனவே சமூகத்திற்கு புதிய தலைமைத்துவம் தேவைப்படுகின்றது என ஒட்டு மொத்தமாக எல்லோரும் ஒருங்கிணைந்து சமூகத்திற்காக ஒற்றுமைப்பட தயாரில்லை. இவைகள் அரசியல் ரீதியான கொடுக்கல் வாங்கள்கள் மட்டுமேயாகும். இன்னும் பல கீழ்த்தரமான, இழிவான, பேசக் கூடாத விடயங்களும் பரவலாக காணப்படுகின்றது.
ஆகவே இந்த நல்லாட்சியிலும் இந்த நாட்டின் சொத்துக்கள் கொல்லை அடிக்கப்படுவதிலிருந்தும், நமது உரிமைகள் நமக்கு தெரியாமல் நசுக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்க வேண்டிய தேவை நமக்கு முன்னே இருக்கின்றது என்பது எங்களுக்குள்ளே நாங்கள் கேட்டுக்கொள்கின்ற முக்கிய கேள்வியாக இருக்கின்றது என்பதனை இந்த சுதந்திரதின நிகழ்வில் ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன் என உணர்ச்சி பூர்வமாக தனது சுதந்திரதின உரையினை விளக்கமாக நிகழ்த்தினார் நல்லாட்சிகான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியயலாளருமான அப்துர் ரஹ்மான்.
அந்த வகையிலே காத்தான்குடியில் அமைந்துள்ள நல்லாட்சிக்கான தேசியமுன்னணியின் பிரதான காரியாலையத்தில் இன்று காலை 8.30 மணிக்கு கட்சியின் ஆதரவாளர்களுடனும் உயர்மட்ட உறுப்பினர்களுடனும் ஆரம்பமான சுதந்திரதின நிகழ்வில் முன்னணியின் பொது செயலாளர் நஜா முஹம்மட் சிறப்புரையாற்றியதுடன் நாடு தழுவிய ரீதியில் ஒரு மாதத்திற்கு முன்னர் மாணவர்களுக்கான 20000 பார்சல்களை கொண்ட அப்பியாச கொப்பிகளை பொதி செய்து சிறப்பாக வழங்குவதற்கு ஒத்தாசை வழங்கியவர்களுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மானினால் கொளரவிப்கப்பட்டு சான்றிதழ்களும் வழங்க்கி வைக்கப்பட்டது.