நவீனமடைந்து காணப்படும் இன்றைய ஸ்மார் உலகு ஸ்மார்ட் போன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது, அனைத்தையும் மொபைல் மூலம் செய்துகொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
காதல், காமம், தகாத உறவு, கள்ளத் தொடர்பு, என்ற இஸ்லாமியத்துக்கு எதிரான அனைத்து விடயங்களும் இன்று இந்த ஸ்மார்ட் மொபைல் மூலம் மலிந்துள்ளது.
அதிகமதிகள் பாவனையாகும் FACEBOOK WHATSAPP VIBER IMO போன்ற இணைய தொடர்பாடல் சாதனங்களின் மூலம் அந்நிய ஆண், பெண்களுடன் சகஜமாக உறவுகொள்கின்றனர், அது காதலாகவும், காமமாகவும், தகாத தொடர்புகளாகவும் மாற்றம் பெறுகிறது. இதனால் ஷினா எனும் பாவத்தை இலகுவாக மொபல் மூலம் செய்துகொள்கின்றர். அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்தே இந்த பத்தி எழுதப்படுகிறது.
மெபைல் மூலம் தொடர்பானால் புகைப்படங்களை செயார் செய்வது காமமானால் அந்தரங்க உறுப்புகளின் படங்களை அனுப்புவது, மொபைலில் சுய இன்பம் காண்பது. அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அனுப்புவது, இது சர்வ சாதாரணமாக இன்று நடைபெறுகிறது. காம பேச்சுக்கள், வீடியோக்கள், போட்டாக்களை செயார் செய்தல், அந்த படங்களை செயார் செய்தல் என்ற கேவலமான நிலைக்கு இன்று மொபல் வழிவகுத்துவிட்டது.
அல்லாஹ்வைப் பயந்துகொள்ளுங்கள், இவைகள் உங்கள் குடம்பத்திலும் நடக்கலாம். அனைவரும் இறைவனுக்கு பதில் சொல்ல வேண்டும். நம் அனைவரையும் பாதுகாப்பானாக.