முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபார்சு செய்வதற்காக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் ஒன்று கூடி சிபார்சு அறிக்கை தொடர்பில் ஆராயவுள்ளது.
குழுவிற்குக் கிடைத்த அனைத்து சிபார்சுகளும் குழு அமர்வுகளின் போது
கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், குழுவின் அங்கத்தவர்கள் அனைவரினதும்
அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டு அறிக்கையை வெளியிடுவதற்குத்
தீர்மானித்துள்ளதாகவும் குழுவின் தலைவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் தெரிவித்தார்.

இதேவேளை, குழுவின் முக்கிய உறுப்பினர்கள் இருவர் தற்போது வெளிநாட்டு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதால்எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் அறிக்கையை வாசித்து அனைவரும் கையொப்பமிடுவதில் தாமதங்கள் ஏற்படவுள்ளன.
அறிக்கை வெளியிடப்பட்டதும் அதன் பிரதிகள் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்வழங்கப்படவுள்ளன.
தற்போதைய அரசாங்கத்தினால் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு சலீம் மர்சூபின் குழுவினது சிபார்சுகளையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபார்சுகள் ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு திருத்தங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும்