சிலோன் முஸ்லிம் விஷேட செய்தியாளர்
கல்குடாவில் தமிழர்களும் முஸ்லிம்களும் செறிந்து வாழும் பகுதியில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப் பிரதேச அரசியல்வாதிகளும் பொது மக்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் தலையீட்டுடன் குறித்த மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் (http://www.ceylonmuslim.com/) எதிர்ப்புக் காரணமாக குறித்த தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
19 ஏக்கர் நிலப்பரப்பில் 4.5 பில்லியன் ரூபா செலவில் குறித்த தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மதுபான தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கு கோரளைப் பற்று பிரதேச சபை எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. அத்துடன் இந்த திட்டத்தை முன்னெடுப்பதை இடைநிறுத்துமாறு 2016 செப்டம்பரில் கிழக்கு மாகாண சபையும் உத்தரவிட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தலின் போது இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தலை நீக்குவதாக வாக்குறுதியளித்து 18 வாரங்களுக்கு கல்குடாவில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனுமதி (http://www.ceylonmuslim.com/) வழங்கியுள்ளமை கவலைக்குரியதாகும். இந்த தொழிற்சாலையில் முதலிட்டிருப்பவர் மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய நபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இவ்வாறானதொரு மதுபான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கு (http://www.ceylonmuslim.com/) அனுமதியளித்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.