Top News

ஹஜ் 2017: தொடரும் குளறுபடிகள்!


காப்பக படம் - சென்ற வருடம் ஹஜ் சென்ற முதல் குழு

2017 ஆம் ஆண்டின் புனித ஹஜ் கட­மையை  நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்த யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் தபாலில் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தங்­களில் குள­று­ப­டிகள் ஏற்­பட்­டுள்­ள­தாக பலர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு, அரச ஹஜ் குழு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு முறைப்­பாடு செய்­துள்­ளார்கள்.

பிழை­யான பதிவு இலக்­கங்கள், பிழை­யான பெயர்கள் குறிப்­பிட்டு கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளதால் அசௌ­க­ரி­யங்­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­தாக முறை­யிட்­டுள்­ளனர். 

இவ்­வி­வ­காரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பதில் பணிப்­பாளர் எம்.எல்.எம். அன்வர் அலியை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது “ஆயி­ரக்­க­ணக்கில் கடி­தங்கள் தபாலில் சேர்க்­கப்­பட்­டன.  இந்தப் பணி­களில் ஈடு­பட்ட ஊழி­யர்­களின் தவ­றி­னாலும் கவனக் குறை­வி­னா­லுமே இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ளது. அவ்­வாறு பெயர் மற்றும் பத­வி­லக்கம் தவ­றாக குறிப்­பிட்டு கடி­தங்கள் கிடைக்கப் பெற்­ற­வர்கள் திணைக்­க­ளத்தை 011 2672646 அல்­லது 077 9774219 எனும் இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளும்­படி வேண்டிக் கொள்கிறேன்.அவ்வாறு தவறான கடிதங்கள் கிடைக்கப் பெற்றவர்களின் பிரச்சினைகள் உடன் தீர்க்கப்படும் என்றார்.

முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஹஜ் யாத்திரை தொடர்பான நடவடிக்கைகள் வருடாந்தம் குளறுபடிகளை ஏற்படுத்துவது கவலைக்குரியதாகும்.

கடந்த பல வருடங்களாக இந்த ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் தோன்றும் முரண்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Previous Post Next Post