Headlines
Loading...
கையாலாகாத 21 முஸ்லிம் எம்.பி.க்கள்

கையாலாகாத 21 முஸ்லிம் எம்.பி.க்கள்



வில்­பத்து சர­ணா­ல­யத்­துக்கு வடக்கே உள்ள நான்கு வன பிர­தே­சங்­களை பாது­காக்­கப்­பட்ட பகு­தி­யாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வர்த்­த­மானி அறிக்­கையில் ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்­டுள்ளார். 

இதற்­க­மைய இப் பிர­தேசம் வன இலாகா திணைக்­க­ளத்­துக்குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ரஷ்­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள நிலை­யி­லேயே இந்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் ஒப்­ப­மிட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 வில்­பத்து தேசிய சர­ணா­ல­யத்­துக்கு வடக்­காக அமைந்­துள்ள வன பாது­காப்பு திணைக்­க­ளத்­துக்­கு­ரிய மாவில்லு, வெப்பல், மறிச்­சிக்­கட்டி, விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு ஆகிய பாது­காக்­கப்­பட்ட வனங்கள் இணைக்­கப்­பட்டு வன பாது­காப்பு கட்­டளைச் சட்­டத்தின் ‘3A’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாது­காக்­கப்­பட்ட வனம்’ என பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 ஜனா­தி­பதி மேற்­படி வர்த்­த­மானி பிர­க­ட­னத்தில் கையொப்­ப­மிட்­டுள்ளதன் மூலம் முஸ்லிம் மக்கள் அப் பகு­தியில் தொடர்ந்து வாழ்­வது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது

மேற்­படி பகு­தி­க­ளுக்குள் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களும் உள்­ள­டங்­கு­கின்­றன என்ற போதிலும்  இது தொடர்பில் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் இதுவரை எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை.  முஸ்லிம் தலைமைகள் இவ்வாறு மௌனம் காப்பது கவலைக்குரியதாகும்.

இந்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரி சிவில் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமது கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.

உடனடியாக 21 முஸ்லிம் எம்.பி.க்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை நேரில் சந்தித்து இதனை இரத்துச் செய்யுமாறு கோர வேண்டும். இன்றேல் வீதியிலிறங்கிப் போராட வேண்டும். இன்றேல் இந்த 21 பேரும் கையாலாகாதவர்கள் என்பதை மீண்டும் நிரூபிப்பதாக இது அமைந்துவிடும்.