எம்.எம்.ஜபீர்
சம்மாந்துறை பிஸ்மி குர்ஆன் மதிர்ஸாவின் 4ஆவது வருட பூர்த்தி விழா பிஸ்மி குர்ஆன் மதிர்ஸாவின் அதிபர் மௌவியா ஏ.எம்.நஸ்லியா தலைமையில் மதிர்ஸா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை ஜம்மியத்துல் குர்ஆனில் ஹக்கீமின் வலயத் தலைவர் மௌலவி அப்துல் பதாஹ், சம்மாந்துறை ஜம்மியத்துல் குர்ஆனில் ஹக்கீமின் செயலாளர் ஏ.எம்.பறாகுத்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், மௌலவி யூ.எல்.சலாவுத்தின், மௌலவி பீ.எம்.பர்ஹானுத்தீன், சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஏ.எல்.நிஸார், முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை வேட்பாளர் ஏ.புவாட், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பிஸ்மி குர்ஆன் மதிர்ஸாவில் ஓதிமுடித்து பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறும் 20மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.