Top News

"கிழங்கு டேஸ்ட்" - கிழக்கின் பழம்பெரும் உணவு முறை

கிழக்கு மாகாணம் இயற்கையாகவே அழகும் குணமுள்ள மக்களும் வாழுமிடம்.  இங்கு மக்களின் பண்புகளை போல அவர்களின் கைவண்ண உணவும் மிகவும் ருசியானது.

இலங்கையில் தனித்துவமான உணவு வகைகளுக்கு பிரபலம் மிக்க கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களான கிண்ணியா, மூதுர், காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர், பாலமுனை, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று. இறக்காமம், பொத்துவில் ஆகியவை சாப்பாட்டிற்கு மட்டுமல்லாமல் ஏனைய தின்பண்டங்களுக்கும் இனிப்பு பலகாரங்களுக்கும் பிரபலமிக்கது.

இதில் முக்கியமானது கிழங்கு டேஸ்ட், மாழலை நேரங்களில் இந்த உணவு கிழக்கில் அதிகம் பிரபலம் பெற்றுள்ளது.

© Image Copyright by Ceylon Muslim

கிழங்கு டேஸ்ட்
கிழங்கு டேஸ்ட் எனபது மரவெள்ளி கிழங்கை மஞ்சள் தடவி பொரித்து நசித்து அதன்மேல் மசாலா துாவி (கட்டர்துள், மாசி,கூனி, உப்பு) தேசிப்புளி ஊற்றுவதேயாகும்.

© Image Copyright by Ceylon Muslim


பாபத் மற்றும் இறைச்சி பொரியல்
சாதாரணமாக வீட்டில் பொரிப்பது போலல்லாது மிகுந்த மசாலா சேர்த்து வாட்டிய பொரியலாக இது இருக்கும். இதற்கு மேல் துாள் மற்றும் புளியூற்றினால் சுவைஅதிகம்

© Image Copyright by Ceylon Muslim
பருப்பு வடையும் உழுந்து வடையும்
பருப்பு வடை மற்றும் உழுந்து வடையென்பன கிழங்கு கடைகளில் கிடைக்கும் மேலதிக உணவு வகைகளாகும்.

கிழங்கு டேஸ்ட் கடையென்பது இவையனைத்தையும் உள்ளடக்கிய ஒரு ஒட்டுமொத்த சுவைப்பெட்டகமாகும். நீங்களும் கிழக்கு மாகாணத்திற்கு சென்றால் கிழங்கு டேஸ்டை சுவைத்து பாருங்கள்

படமும் பத்தியும் - மிசாரி அப்துல் மஜீத்
Previous Post Next Post