Top News

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு கிழக்கு முதலமைச்சரினால் ஆசிரியர் நிமயமனங்கள்



கிழக்கு மாகாண மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானப் பாட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ் தண்டாயுதபானி,விவசாய அமைச்சர்  கி.துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்  எம் அன்வர் ஆகியோரும்  இந்த  நிகழ்வில் கலந்து கொண்டனர்,’

இதன்போது 104  பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கிவைக்கப்பட்டன.

இதில்போட்டிப் பரீட்சையில் தோற்றி 40 புள்ளிகளைப் பெறாத  பட்டதாரிகளை உள்ளீர்க்கவெட்டுப்புள்ளிகளை  35 ஆக குறைத்து பட்டதாரிகளை உள்வாங்க கிழக்கு மாகாண சபை தீர்மானித்த்து,

இதனடிப்படையில்  07 கணித ஆசிரியர்கள்,74 ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் 23 விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இதன்போது வழங்க்கப்பட்டன
Previous Post Next Post