முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூதின் அமைதி எதையோ சமூகத்திற்கு சொல்வது போல இருக்கிறது.
காரணம் அண்மைக்காலமாக மு.காவில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்தும் அசிங்கமான செயற்பாடுகள் குறித்தும் தான் சி.டி மற்றும் ஆதாரங்களை வெளியிடுவதாக பசீர் சேகுதாவூத் தனது முகப்புத்தக பக்கத்தில் ஜனவரி 31ம் திகதி பதிவி்ட்டிருந்தார்.
ஆனால் இதுவரை எந்தவித விடயங்களும் வெளிக்கொண்டு வரப்படவில்லை முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைம பீடத்தை மாற்ற வேண்டும் என்று கூறிய ஹசனலி அலியும் கடந்த வாரங்களாக மந்த நிலையில் காணப்படுகின்றனர். இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் ஏதோ அமைதியாக நடக்கிறது என ஊகிக்க தோன்றுகிறது.
எவை எப்படியிருந்தாலும் வெளிப்படையான போராட்டங்களை தற்பொழுது தொடங்க மாட்டார்கள் காரணம் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கிய போராட்டங்களாக அமைந்தால்தான் போராட்டங்களை நடாத்துவதன் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
இதற்கிடையில் ஹக்கீம் தரப்பு வலுவடைவதாகவே கருத வேண்டும், காரணம் இடையில் சொல்லப்படகின்ற விடயங்கள் குறித்து அதன் ஆதாரம் இல்லாமல் சொல்லப்படுகிற போது மக்கள் மத்தியில் அது எடுபடாது. இந்த நடவடிக்கை காரணமாக அது பொய் என ஹக்கீம் அணி சொல்லி இன்னும் அவர்கள் பலமாக அதிகம் வாய்ப்புள்ளது.
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே, என்ற அடிப்படையில் ஹக்கீம் குற்றம் செய்திருப்பாராயின் அவரை தலைமை பீடத்திலிருந்து மாற்றி கட்சியை பலப்படுத்த வேண்டும்,
இல்லையேல் இஸ்லாமிய அகீதா அடிப்படையில் பாவங்களுக்கு துஆ பிரார்த்தனை செய்து மீண்டும் துாய பாதையில் பயணிக்க வேண்டும். இது இரண்டும் நடைபெறுவது குதிரைக்கொம்புதான்.
பஹத் ஏ.மஜீத்