Top News

இனவாதத்திற்கு துணை போகும் மைத்திரி - முஜீபுர் றஹ்மான் காட்டம்



முஸ்லிம்களின் கருத்­துக்­க­ளுக்கு செவி­சாய்க்­காது, வில்­பத்து வனம் தொடர்­பி­லான வர்த்­த­மா­னியில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையொப்பமிட்டுள்ளது தெற்கின் இனவாதிகளுக்கு தலைசாய்த்திருப்பதையே உறுதிப்படுத்துகிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கருத்து தெரிவித்துள்ளார்.


வில்பத்து வனம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி இன­வா­தி­க­ளுக்கு சார்­பாக ஒரு­த­லைப்­பட்­ச­மாக செயற்­பட்­டி­ருக்­கிறார். எனவே அவர் அதனை உட­ன­டி­யாக வாபஸ்­பெற வேண்டும்  என்றும் அவர் கோரிக்கை  விடுத்­துள்ளார்.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்கு முஸ்லிம்களை மீள்­கு­டி­ய­மர்த்­தா­மை­யி­னா­லேயே இவ்­வா­றான பிரச்­சினை தோன்­றி­யி­ருப்­ப­தாக மேலும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

மறிச்­சிக்­கட்டி, மாவில்லு, வெப்பல், விளாத்­திக்­குளம், பெரி­ய­மு­றிப்பு 
உள்­ள­டங்­கிய பகு­திகள் மக்கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்த பகு­தி­க­ளாகும். 
அதற்­கான ஆவ­ணங்கள் பலவும் அங்­குள்ள மக்­க­ளிடம் இருக்­கின்­றன.  
இது குறித்து ஜனா­தி­பதி பரி­சீ­லிக்­காது தீர்­மானம் எடுத்­தி­ருப்­பதும் மிகவும் தவ­றா­ன­தாகும். அவர் கையொப்­ப­மிட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலை வாபஸ்­பெற வேண்டும்

வடக்கில் முப்­பது வரு­ட­காலம் யுத்தம் நீடித்­தது. இதில் இடம்­பெற்ற மிக 
மோச­மான விவ­கா­ரமே இன சுத்­திக­ரிப்பின் அடிப்­ப­டை­யி­லான வடக்கு 
முஸ்­லிம்­களின் வெளியேற்­ற­மாகும். முஸ்­லிம்கள் வடக்­கி­லி­ருந்து விடு­தலை புலி­க­ளினால் பல­வந்­த­மாக வெளியேற்­றப்­பட்டு 27 வரு­டங்­க­ளா­கின்­றன. 
அத்­துடன் யுத்தம் நிறை­வ­டைந்து 8 ஆண்­டுகள் நிறை­வ­டைந்தும் இந்த முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான எந்­த­வொரு திட்­டத்­தையும் மஹிந்த 
அர­சாங்­கமே இந்த நல்­லாட்சி அர­சாங்­கமோ முன்­வைக்­க­வில்லை.

முஸ்­லிம்கள் அர­சாங்­கத்­தினால் திட்­ட­மி­டப்­பட்டு மீள்­கு­டி­யேற்­றப்­
பட்­டி­ருப்பின் வில்­பத்து பிரச்­சி­னையே வந்­தி­ருக்­காது. முன்னாள் 
ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் 
நல்­லி­ணக்­கத்­திற்­கான ஜனா­தி­பதி ஆணைக்­குழு (எல்.எல்.ஆர்.சி) யின் 
அறிக்­கையின் பிர­காரம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­ட­வேண்டும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எல்.எல்.ஆர்.சி. அறிக்­கை­யையும் 
மீறி­யி­ருக்­கிறார். 

அவர் இன­வா­திகள் தயா­ரித்து வழங்­கிய திட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு 
எத்­த­னிக்­கிறார். இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

ஜனா­தி­பதி இன­வா­தி­களை அழைத்து அவர்­க­ளுடன் ஜனா­தி­பதி 
மாளி­கையில் கலந்­து­ரை­யா­டினார். ஆனால் 30 வருட யுத்­ததால் பாதிக்­கப்­பட்ட வடக்கு மாகாண முஸ்லிம் மக்­க­ளுடன் எவ்­வித கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை.

அவர்­களின் கருத்­துக்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கும் ஜனா­தி­பதி முயற்­சிக்­க­வில்லை.

மாறாக, நாட்டில் இன­வா­தத்தை பரப்பி மற்­று­மொரு யுத்­தத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்த கடும்­போக்குவாதி­களின் சதியில் ஜனா­தி­பதி சிக்­கி­யுள்ளார். அவர்­களின் திட்­டத்­திற்கு அடி­ப­ணிந்­தி­ருக்­கிறார்.

இது இன்­னு­மொரு பாரிய பிரச்­சி­னை­யையே தோற்­று­விக்கும்.
வடக்கில் தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தை பெற்­றுக்­கொள்ள தொடர்ந்தும் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு தீர்­வொன்றை வழங்­காத ஜனா­தி­பதி மற்­று­மொரு சிறு­பான்­மை­யி­ன­மான முஸ்­லிம்­களின் பூர்­வீ­கத்தை கைய­கப்­ப­டுத்தி பிறி­தொரு பிரச்­சி­னைக்கு வழி­வ­குக்­கிறார். இது பெரும் அபா­ய­க­ர­மான சூழ­லாகும். 

இதனால் வடக்கு முஸ்­லிம்­க­ளுக்கு பாரி­ய­தொரு அநீதி இழைக்­கப்­
பட்­டி­ருக்­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் பிழை­யா­ன­தொரு முடி­வாகும். இன­வாதம் தலை­தூக்­கு­வ­தற்கும் வழி­வ­குக்கும்.

காடுகள், இயற்கை வளங்­களை பாது­காப்­ப­தற்கு நாம் இடை­யூ­றா­ன­வர்கள் அல்ல. நாம் இயற்­கையை அதிகம் நேசிக்­கக்­கூ­டி­ய­வர்­களே. ஆனால் வில்­பத்து விவ­கா­ரத்தில் வடக்­கி­லுள்ள முஸ்லிம் மக்கள் அநி­யா­ய­மாக நசுக்கப்படுகின்றனர்.  அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் கருத்துக்கள் அறியப்பட வேண்டும். இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும். இதனை விஞ்ஞானபூர்வமாக தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கானதொரு திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாக அம்மக்களின் நலன்கள் பேணப்பட வேண்டும் என்றார். 
Previous Post Next Post