சேகு
நாடாளுமன்றில் குழப்பங்களை ஏற்படுத்துவதே கூட்டு எதிரணியின் வேலையாகிப் போய்விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இந்த குழுவினரின் குழப்பங்கள் அதிகரித்து வருவதாகவும்,தினமும் காலை,மாலை என இரண்டு வேளைகளிலும் இரண்டு மணித்தியாலயங்கள் இவர்கள் நாடாளுமன்ற செயற்பாடுகளை குழப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத அளவில் இவர்கள் பிரச்சினைகளை உருவாக்குவதாகவும்,இவர்கள் தொடர்பில் உண்மைகளை சபையில் தெரிவித்த போது அமைச்சர் ஒருவரை அண்மையில் தாக்கியதுடன்,தன்னையும் தாக்க முயன்றதாக முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டினார்.