புத்தளத்தில் நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு

NEWS


எம்.யூ.எம். சனூன்

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கொன்று, எதிர்வரும் 26ஆம் திகதிக் காலை 9 மணி முதல் 4 மணி வரை, புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. புத்தளம் நேவிகய்ஸ் இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த இலவச கருத்தரங்குக்கு, கட்டார் அமைப்பின் ஸ்ரீ லங்கா மஜ்லிஸ் அமைப்பு பூரண அனுசரணை வழங்கியுள்ளது. இலங்கை சுங்க திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளில் ஒருவரான ஓ.எம். ஜபீர், இந்த கருத்தரங்கில் வளவாளராகக் கலந்துகொள்ளவுள்ளார். பரீட்சை வினாத்தாள் கட்டமைப்பு, போட்டிப் பரீட்சை, இலகு குறிப்புக்கள் மற்றும் பல்வேறு முக்கிய தகவல்களுடன் பெறுமதி வாய்ந்த கையேடுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், பரீட்சார்த்திகளை கலந்துகொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
6/grid1/Political
To Top