முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா கடந்த பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போனமைக்கு முக்கிய காரணம் எம்.எஸ் உதுமாலெப்பைதான் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துல்கர் நயீம் (துல்சான்) குறிப்பிட்டார்.
சிலோன் முஸ்லிம் இணைய இதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை அவர் தெரிவி்த்தார், மேம் கருத்துரைத்த அவர்,
கடநத பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுறுவதை அதாஉல்லாவை தவிர அவர் சகாக்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர், அவருடன் இருந்தவர்ளே அதாஉல்லா தோற்றுவிடுவார் என குறிப்பிட்டனர். அப்படி கூறிய ஒரு சிலர் இன்றும் அதாஉல்லாவுடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் அதாஉல்லா என்ற தனிமனிதர், நல்ல குணமுள்ள மனிதர், அஷ்ரபின் அரசியல் பாசறையில் கற்ற துாய அரசியல்வாதி, அவர் ஒருபோதும் தான் உழைக்கவேண்டும் என எண்ணியது இல்லை. அப்படியெண்ணிருந்தால் கோடிஸ்வரர்களுள் இன்று அதாஉல்லாவும் முக்கியஸ்தராக இருந்திருப்பார். நம்பிக்கை என்ற விடயத்தில் அரசியல் வாதிகளுள் அதாஉல்லாவை மிஞ்சிவிட முடியாது. ஆனால் கூடவே இருந்து அவரை தோற்கடித்த அவர் சகாக்களே அனைத்திற்கும் காரணம்.
அதாஉல்லாவுடன் இணைந்து கொண்ட அனைவரையும் ஓரம் கட்டி தாங்கள் முன்நிற்க வேண்டும் என்று எண்ணினர், பல கோடி சொத்துக்களையும் குவித்தனர். பொத்துவில், பொலநறுவை பொன்ற பிரதேசங்களில் காணிகளை வாங்கினர் அனைத்தும் அதஉல்லாவினால் வந்தது, ஓடுவதற்கு மோட்டார் வண்டி இல்லாத பஸ் கண்டெக்டர்களாக இருந்தவர்கள் கோடிக்கணக்கில் உழைத்தனர் இவற்றை அறிந்திராத அதாஉ்ல்லா அவர்களை நம்பினார்.
கடந்த தேர்தலில் அட்டாளைச்சேனை பாலமுனை ஒலவில் பொத்துவில் மக்கள் அதாஉல்லாவிற்கு கணிசமான வாக்களித்து இருந்தால் அதாஉல்லா வென்றிருக்கலாம். ஆனால் அட்டாளைச்னையில் 2400, ஏனைய பிரதேசங்களில் 1000, 500 என்று வாக்குகள் அதாஉல்லாவிற்கு கிடைத்திருந்தது.
அட்டாளைச்னையில் கட்சி வளர்க்காதது அதாஉல்லாவின் பிழையல்ல, அது உதுமாலெவ்வையின் பிழை, ஒலுவில், பாலமுனை, பொத்துவில் பிரதேசங்களில் கட்சி வளர்க்காதது உதுமாலெவ்வையின் பிழை. மாகாண அமைச்சர் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது, உதுமாலெவ்வையின் சகோதாரர்கள் சொந்த பந்தம் என அனைவருக்கும் தொழில் கூடவே மாகாண அமைச்சின் வாகனங்கள், இவற்றை அவர்கள் சொந்த வயிறு நிரப்பவே பயன்டுத்தினர். கட்சி வளர்க்க வில்லை.
அதாஉல்லா என்ற நல்லதொரு தலைவன், கூடவே இருக்கும் ஏனைய நாசகாரர்களால் தோற்கப்படுவார், இறுதியில் இருக்கும் மாநகர சபையையும் இழந்துவிடலாம் என்றார்.