Top News

உணர்வுகளின் அதிர்வுகள்



எம்.எம்.ஏ.ஸமட்

இலங்­கையின் சம­கால நாட்கள் பல்­வேறு பேசு­பொ­ருள்­க­ளுடன் நகர்ந்து செல்­கின்­றன. வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களின் போராட்­டங்கள், நில­மீட்பு போராட்­டங்கள், காணாமல் போன அல்­லது காணாமலாக்­கப்­பட்­ட­வர்­களை கண்­டு­பி­டித்­துத்­தா­ருங்கள் எனக் கண்­ணீர்­விட்­ட­ழுது நடந்­தே­று­கின்ற போராட்­டங்கள் என வடக்கு மற்றும் கிழக்கில் தொட­ராகப் போராட்­டங்­களும் ஆர்ப்­பாட்­டங்­களும் நடை­பெற்று வரு­கின்­றன. 
இடை­யி­டையே சிறு சிறு விட­யங்­க­ளுக்­கான போராட்­டங்­களும் தொடங்­கப்­பட்டு தொட­ராமல் முடி­வ­டை­கின்­றன. இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட தரப்­பு­களின் மத்­தி­யி­லி­ருந்து எழு­கின்ற உணர்­வு­களின் அதிர்­வுகள் பல்­வேறு வடி­வங்­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

தெற்­கிலும், தனியார் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கெ­தி­ரான போராட்­டங்கள், அரச அபி­வி­ருத்­திக்கு எதி­ரா­கவும், ஆத­ர­வா­கவும் நடை­பெ­று­கின்ற போராட்­டங்கள், பணிப்­ப­கிஷ்­க­ரிப்­புக்கள், அதற்கான ஆயத்­தங்கள் என சம­கால நாட்­களின் செய்­தி­க­ளோடு ஆங்­காங்கே தற்­கொ­லைகள், சிறுவர், பெண்கள் மீதான பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்கள், கொள்ளை, கொலை என்ற குற்­றச்­செ­யல்கள் மாண­வர்­களின் அத்­து­மீ­றல்கள் என பல்­வேறு சகித்­துக்­கொள்ள முடி­யாத சம்­ப­வங்கள் இடம்­பெற்­று­வ­ரு­வ­தையும் அவ­தா­னிக்க முடி­கி­றது. இத்­த­கைய  நிலை­மை­க­ளுக்கு மத்­தியில், அர­சியல் கட்­சி­க­ளுக்குள் ஏற்­பட்­டுள்ள இழு­ப­றி­நி­லைகள், அறிக்­கைப்­போர்கள், வாதப் பிர­தி­வா­தங்­களும் அடங்­கு­கின்­றன.

போராட்­டங்­களும், ஆர்ப்­பாட்­டங்­களும் 
ஒரு பக்கம் மக்கள் உணர்­வு­களை தூண்­டி­யி­ருக்­கின்ற சூழலில், அப்­போ­ராட்­டங்­க­ளுக்கும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கும் சமூகங்­களின் சில தரப்­புக்கள் மத்­தி­யி­லி­ருந்து  ஆத­ர­வுக்­க­ரங்­களும் நீட்­டப்­பட்­டுள்ள நிலையில், அர­சியல் கட்­சி­க­ளுக்குள் நடந்­தே­று­கின்ற வெட்­டுக்­குத்­துக்­களும், ஏமாற்­றங்­களும், வீராப்புப் பேச்­சுக்­களும், எதிர்ப்­ப­லை­களும் இக்­கட்­சி­களை  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் மக்­களை வெறுப்புணர்­வு­க­ளுக்குள் தள்­ளி­யுள்­ள­தை­யும் மக்­களின் உணர்­வு­களில் அதிர்­வு­களை உரு­வாக்­கி­யி­ருப்­ப­தையும் காண­மு­டி­கி­றது.

ஐ.நா.வின் மனித உரி­மைகள் பேர­வையின் 35ஆவது கூட்டத் தொடர் நடந்­து­கொண்­டி­ருக்­கின்ற இக்­கா­ல­கட்­டத்தில், இலங்கை அர­சினால் கோரப்­பட்­டுள்ள கால அவ­கா­சத்தை வழங்கக் கூடாது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த 8 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைச்­சாத்­திட்டு பேர­வைக்கு அனுப்பி வைத்­துள்ள நிலையில், கூட்­ட­மைப்பின் எஞ்­சிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கால அவ­காசம் வழங்­கு­வதை நியா­யப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இவ்­வாறு நியா­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மை­ தமிழ் அர­சியல் தரப்­பிலும், மக்கள் மத்­தி­யிலும் பல்­வேறு உணர்­வ­லை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. அவற்­றுக்­கான ஆத­ரவு, எதிர்ப்பு என்ற இரு வடிவங்களில் தமிழ் மக்­களின் உணர்­வு­களின் வெளிப்­பா­டாக பல்­வேறு கருத்­துக்கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

இத்­த­ரு­ணத்தில், முஸ்­லிம்­களின் அதி­கப்­ப­டி­யான வாக்­கு­களைப் பெறும் முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள பதவி பறிப்பு, பதவி விலக்கல் மற்றும் பதவி துறப்பு அவற்­றோடு தலை­மையின் செயற்­பா­டுகள், கருத்­துக்கள், மேடைப் பேச்­சுக்கள் என்­பவை இக்­கட்­சியின் ஆரம்­ப­காலப் போரா­ளி­களை ஆத்­தி­ரத்­துக்குள் தள்­ளி­யுள்­ளது. அவர்­களின் உணர்­வு­களில் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­ன்றன. எச்­ச­ரிக்கைக் குறிப்­புக்­களை விடுக்கச் செய்­துள்­ளன. 

'தாருஸ்­ஸலாம் மறைக்­கப்­பட்ட மர்­மங்கள்' என்ற தொகுப்­பா­னது தாருஸ்­ஸலாம் மீட்பு முன்­னணி என்ற அமைப்­பொன்­றினால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளதைத் தொடர்ந்து நடந்­தே­றிய நிகழ்­வு­களின் பின்­ன­ரான நாட்­களில் இக்­கட்சி குறித்­தான விமர்­ச­னங்­க­ளையும் இக்­கட்­சியின் ஆரம்­ப­காலப் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து எழு­கின்ற உணர்­வு­களின் அதிர்­வு­க­ளையும் அதிகம் அவ­தா­னிக்க முடி­கி­றது.

குறிப்­பாக கிழக்கு மாகா­ணத்தின் அம்­பாறை மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கிரஸ் தொடர்­பான விமர்­ச­னங்கள் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது. இந்­நி­ல­மை­யா­னது இக்கட்­சி­யி­னது ஆரோக்­கி­யத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­தோடு முஸ்லிம் அர­சி­ய­லிலும் பல­வீ­னத்தை ஏற்­ப­டுத்தும் சாத்­தி­யக்­கூற்­றையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

இத்­த­கைய சூழ்­நி­லையில், முஸ்லிம் அர­சியல் தொடர்­பான வர­லாற்றை பின்­நோக்கிப் பார்க்க வேண்­டிய கடப்­பாடும் காணப்­ப­டு­கி­றது. ஏனெ­னில, தனித்­து­வ­மி­ழந்து காணப்­பட்ட முஸ்லிம் அர­சியல், அஷ்ரப் எனும் ஆளு­மையின் அர­சியல் பிர­வே­சத்­தி­னூ­டாக தனித்­துவம் பெற்­ற­துடன் அவ­ரது யுக முடி­வா­னது தனித்­துவம் என்ற போர்­வைக்குள் தனித்­து­வ­மி­ழந்த  செயற்­பா­டுகள் பல­வற்றை முஸ்லிம் அர­சி­யலில் அரங்­கேற்­றி­யி­ருக்­கி­றது. 

மக்­களை அட­கு­வைத்து தங்­களின் வளங்­களை அதி­க­ரித்­துக்­கொள்­வ­தற்­காக நடந்­தே­றிய அர­சியல் அரங்­கேற்­றங்­களுக்கு ஒத்­து­ழைத்­த­வர்­களே அவ்­வ­ரங்­கேற்­றங்கள் குறித்து அறி­விப்­பதன் ஊடாக அறி­ய­மு­டி­கி­றது.

முஸ்லிம் அர­சி­யலும் பார்­வையும்
பன்­முக இனக்­கு­ழு­மங்­களைக் கொண்ட இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முஸ்லிம் அர­சியல் பல வர­லாற்றுப் படி­மங்­க­ளையும் யுகங்­க­ளையும் தாங்­கி­யுள்­ளது. இந்த வர­லாற்றுப் படி­மங்கள் மற்றும் யுகங்­களில் வடக்கு, கிழக்கு மற்றும் தென்­னி­லங்­கையில்  வாழ்ந்து மறைந்த மற்றும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் வகி­பங்கு குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­கது.

வடக்கு, கிழக்கு முஸ்­லி­ம்கள் பார்­வையில்  முஸ்லிம் அர­சியல் மூன்று யுகங்­க­ளாக எடுத்து நோக்­கப்­ப­டு­கி­றது. அதில் ஒன்று மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்­ரபின் அர­சியல் யுகத்­திற்கு முன்­ன­தான அர­சியல் யுகம், இரண்­டா­வது அஷ்­ரபின் அர­சியல் கால யுகம், மூன்­றா­வ­தா­னது அஷ்­ரபின் மறை­வுக்கு பின்­ன­ரான யுகம். 

இலங்கை முஸ்­லிம்­களின் குடித்­தொ­கையில் மூன்றில் இரண்டு பங்­கினர் வடக்கு  மற்றும் கிழக்­கிற்கு வெளியே வாழ்ந்­தா­லும, பல்­வேறு அர­சியல் பின்­ன­ணியில் தென்­னி­லங்கை முஸ்லிம் அர­சியல் பார்வை இருந்­தாலும், வடக்கு மற்றும் கிழக்கு வாழ் முஸ்­லிம்­களால் இம்­மூன்று யுக அர­சியல் பார்­வையே முதன்மை பெறு­கி­றது. 

இவ்­வா­றுள்ள முஸ்லிம் அர­சியல் யுக வர­லா­று­களை  தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி கடந்த கால, நிகழ்­கால மற்றும் எதிர்­கால அர­சியல் காலங்­களாக நோக்­கும்­போ­துதான் முஸ்லிம் அர­சியல் எவ்­வாறு பய­ணித்­தி­ருக்­கி­றது. மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களும் அபி­லா­ஷை­களும் எந்­த­ளவுக்கு பூர்த்தி செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இலக்­கு­க­ளி­னூ­டான பய­ணத்தில் முஸ்லிம் அர­சியல் இருந்­துள்­ளதா அல்­லது சுய­நல மேம்­பாட்­டுக்­கான அர­சியல் பய­ண­மாக முஸ்லிம் அர­சியல் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா எதிர்­கால அர­சியல் எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது போன்ற பல்­வேறு வினாக்கள் எழு­கின்­றன. 

1948ஆம் ஆண்டு இந்­நாடு சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்னும் சுதந்­தி­ர­ம­டைந்த ஓரிரு ஆண்டு காலப் பகு­தி­க­ளுக்­குள்ளும் இலங்­கையின் தேசிய இனங்­க­ளான சிங்­கள, தமிழ் மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய தலை­வர்கள் அர­சி­ய­லி­னூ­டாக மக்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­காக அவ­ரவர் சமூகம் சார்­பாக அர­சியல் கட்­சி­களை உரு­வாக்­கினர். 

ஆனால், தேசிய இன­மான முஸ்லிம் சமூ­கத்­திற்­காக அக்­காலப் பகு­தியில் வாழ்ந்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளினால்  பல­மிக்க அர­சியல் கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சிகள் பேசப்­படக் கூடிய அள­விற்கு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை வர­லாற்றில் அவ­தா­னிக்க முடி­கி­றது. 

சிறி­ய­ள­வி­லான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அவற்றின் பய­னாக இஸ்­லா­மிய ஐக்­கிய முன்­னணி, இஸ்­லா­மிய சோஷ­லிச முன்­னணி, மா­ர்க்ஸிய எதிர்ப்பு முன்­னணி, கொழும்பு முஸ்லிம் ஐக்­கிய முன்­னணி, கிழக்­கி­லங்கை முஸ்லிம் ஐக்­கிய முன்­னணி எனப் பல அர­சியல் ஸ்தாப­னங்கள்  ஸ்தாபிக்­கப்­பட்ட போதிலும், அந்த ஸ்தாபனங்களினால் முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தி­யிலும்  தேசிய அர­சி­ய­லிலும் நிலைத்­தி­ருக்க முடி­ய­வில்லை. சமூ­கத்தின் பெரும்­பா­லா­னோரை ஒரு தனித்­துவ அர­சியல் கட்­சி­யி­னூ­டாக  ஒன்­றி­ணைக்­கவும் இய­ல­வில்லை.

அஷ்­ரபின் யுகத்­திற்கு முன்­ன­ராக அர­சியல் யுகத்தில்  வடக்கு, கிழக்கு மற்றும் தென்­னி­லங்கை முஸ்­லிம்கள்  உட்­பட இந்­நாட்டின் பெரும்­பா­லான முஸ்­லிம்கள் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் அங்கம் வகித்த முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் செயற்­பாட்­டா­ளர்­க­ளா­கவும் ஆத­ர­வா­ளர்­க­ளா­க­வுமே செயற்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

பெரும்­பான்மை தனிக்­கட்­சிப்­ப­லத்­துடன் இந்­நாட்டை மாறி மாறி ஆட்சி  செய்த ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக இருந்­த­வர்கள், இக்­கட்­சி­க­ளி­னூ­டக தேர்­தல்­களில் போட்­டி­யிட்­ட­வர்கள் தேர்தல் காலங்­களில் தங்­க­ளது  ஆதா­ர­வா­ளர்­க­ளையும், செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் மோத­விடும் அர­சியல் கலா­சா­ரத்­தையும் பின்­பற்றிச் செயற்­பட்டு வெற்­றி­பெற்­றி­ருக்­கி­றார்கள் என்ற வர­லாற்று பின்­ன­ணியும் காணப்­ப­டு­கி­றது. 

அவ்­வா­றான நிலை சம­கால முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளினால் குறிப்­பாக முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்ற கேள்வி எழு­ப்பப்­ப­டு­கி­றது. ஏனெனில், கடந்த வெள்ளிக் கிழமை நிந்­த­வூரில் நடை­பெற்ற மரத்தின் வேர்­க­ளுக்கு விளம்பல் என்ற கூட்­டத்தைத் தடை­செய்­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டமை இக்­கேள்­விக்­கான கார­ண­மாக அமை­கி­றது.

அஷ்­ரபின் யுகத்­திற்கு முன்­ன­ரான காலங்­களில் நடை­பெற்ற தேர்­தல்­க­ளி­னூ­டாக பாரா­ளு­மன்­றத்­திற்குத் தெரிவு செய்­ய­ப்பட்ட மக்கள் பிர­தி­நி­திகள் முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மைகள் தொடர்பில் அதிக அக்­கறை செலுத்­தாது சலு­கை­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் வழங்கி அத­னூ­டாக தாங்­களும் அனு­ப­வித்துக் கொண்டு, தங்­களை ஆத­ரித்­த­வர்கள், தங்­க­ளுக்­காக செயற்­பட்­ட­வர்களின் தேவைகள், நலன்­களில் முன்­னு­ரிமை வழங்கி, பிர­தேச அபி­வி­ருத்­தி­யிலும் முடிந்­த­ளவைச் செய்து தங்­க­ளது அர­சியல் பய­ணத்தை தொடர்ந்­தி­ருக்­கி­றார்கள்.

பழம்­பெரும் அர­சி­யல்­வா­தி­களாகக் கரு­தப்­பட்­ட­வர்­களும் அவர்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இயக்­கங்­களை ஸ்தாபித்து செயற்­பட்­ட­வர்­களும் அடுத்த தேர்தல் வெற்றி பற்­றியும் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் பற்­றியும் சிந்­தித்­தார்­களே தவிர, சமூ­கத்தின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கக் கூடிய, சமூ­கத்தின் உரி­மை­களை பெறு­வ­தற்கு உழைக்கக் கூடி­ய­வர்­க­ளாக அவர்­களில் பெரும்­பா­லானோர் செயற்­பட்­டி­ருப்­ப­தாக முஸ்லிம் அர­சியல் வர­லாற்றில் அவ­தா­னிக்கக் கூடி­ய­தா­க­வில்லை. அவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லை­யில்தான் முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபிக்­கப்­பட்­டது. இக்­கட்சி ஸ்தாபிக்­கப்­பட்­டதன் நோக்கம் பத­வி­களைப் பெறு­வ­தற்கோ பணத்தை அள்­ளிக்­கொள்­வ­தற்கோ அல்ல. மாறாக இந்­நாட்டில் வாழ்கின்ற முஸ்­லிம்­களின் பறிக்­கப்­பட்ட உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கும் தனித்­துவ சமூ­க­மொன்று சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்­கான உரி­மை­களைப் பெறு­வ­தற்­கு­மாகும். ஆனால், சம­கா­லத்தில் இந்­நிலை தலை­கீ­ழாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை மாத்­தி­ரமே அவ­தா­னிக்க முடி­கி­றது.
சுய­வி­சா­ர­ணையும் தலை­மை­களும்
முஸ்லிம் காங்­கி­ரஸின் எழுச்­சியும், மறைந்த தலைவர் அஷ்­ரபின் தலை­மைத்­துவ வழி­காட்­டலும் வடக்கு, கிழக்கு முஸ்­லிம்­களை மாத்­தி­ர­மின்றி, நாட்டின் ஏனைய பாகங்­க­ளிலும் வாழ்ந்த முஸ்­லிங்­களை வெகு­வாகக் கவர்ந்­தி­ழுத்­தது. நீலத்­திலும் பச்­சை­யிலும் இருந்து கொண்டு அர­சியல் முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்ட பலர் முஸ்லிம் காங்­கி­ர­சோடு இணைந்து செயற்­பட முன்­வந்­தனர்.

இதன் மூலம் அஷ்­ர­பி­னதும் காங்­கி­ர­ஸி­னதும் பலம் மேலும் வழுப்­பெற்­றது.

அடி­மைத்­த­னத்­துடன் வெறும் சலு­கை­களைக் காட்டி அவற்­றினால் கட்­டி­வைக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­களில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி, சலு­கை­களை விட தனித்­து­வமும் உரி­மை­யுமே முக்­கி­யத்­து­வ­மிக்­கது என்­பதை மறைந்த தலைவர் அஷ்ரப் தனது அர­சியல் பய­ணத்­தி­னூ­டாக வெளிப்­ப­டுத்­தினார்.

அது மாத்­தி­ர­மின்றி, சமூ­கத்தின் உரி­மை­களைப் பெற்­றெ­டுக்கும் கட்­சி­யா­கவே முஸ்லிம் காங்­கிரஸ் செயற்­படும், செயற்­பட வேண்டும் என்ற இலக்­குடன் கட்­சியை முன்­னெ­டுத்த மறைந்த தலைவர் அஷ்ரப் 2000ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற பொதுத்­தேர்­த­லிலும் மாகா­ண­சபை, உள்­ளூராட்சி மன்­றத்­தேர்­தல்­க­ளிலும் வடக்கு, கிழக்கில் மாத்­தி­ர­மின்றி நாட்டின் ஏனைய பகு­தி­க­ளி­லுமி­ருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கும், மாகாண சபை­க­ளுக்கும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கும் உறுப்­பி­னர்­களைப் பெற்­றெ­டுத்தார்.

அஷ்­ரபின்  தலை­மைத்­து­வத்­து­ட­னான முஸ்லிம் காங்­கி­ரஸின் ஏறக்­கு­றைய 15 வருட அர­சியல் காலத்தில் சமூகம் சார்­பான  இலக்­குகள் பல மக்கள் சக்­தி­யி­னூ­டாக வெற்­றி­கொள்­ளப்­பட்­டது. இருப்­பினும், அர­சியல் ரீதியில் சித­றிக்­கி­டந்த சமூ­கத்தை தனித்­துவக் கட்­சி­யி­னூ­டாக ஒன்­றி­ணைத்து செயற்­பட்டு, இந்­நாட்டில் முஸ்லிம் அர­சியல் சக்தி மிகப் பல­மிக்­கது என்று காட்­டு­வ­தற்­காக செயற்­பட்ட அவரின் பிரிவும் தலை­மைத்­துவப் போட்­டியும் இக்­கட்­சி­யையும் அவரின் கன­வு­க­ளையும்  சிதைக்கச்  செய்­தது. இந்தச் சிதை­வா­னது சம­கா­லத்தில் உச்­சத்தை அடைந்­துள்­ளதைக் குறிப்­பிட்­டாக வேண்டும். 

பதவி பறிக்­கப்­பட்ட முன்னாள் செய­லாளர் ஹசன் அலி­­யினதும் பதவி நீக்­கப்­பட்ட முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு தாவூதி­னதும் செயற்­பா­டுகள் மற்றும் அறிக்­கைகள் முஸ்லிம் காங்­கி­ரஸை மக்கள் மன்­றுக்கு இழுத்து வந்­தி­ருக்­கி­றது என்­பதை மறுக்க முடி­யாது. அவர்கள் இரு­வ­ரி­னாலும் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற கருத்­துக்கள் ஆரம்ப காலப் போரா­ளி­களின் உணர்­வு­களில் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. 

கட்­சியைத் தூய்­மைப்­ப­டுத்த வேண்டும் என்று பதவி பறிக்­கப்ப­ட்­ட­வர்­களும் பத­வி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­ட­வர்­களும் கூறி­னாலும், அதற்­கான செயற்­பா­டு­களை அவர்கள் முன்­னெ­டுத்­தாலும்.

இக்­கட்­சிக்­காக இரத்தம் சிந்தி, தியா­கங்கள் பல ­பு­ரிந்து இக்­கட்­சியின் ஆணி­வே­ரா­கவும் பக்­க­வேர்­க­ளா­கவும் இருந்து இக்­கட்சி பெரும் விருட்­ச­மாக வளர இரவு பக­லாக பாடு­பட்­ட­வர்கள் கட்­சியின் தலை­மையில் மாற்றம் வேண்டும், அந்த மாற்றம் கிழக்­கிற்கு மாற வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி வரு­கின்­றனர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை நிந்­தவூர் பிர­தேச சபையின் முன்னாள் தவி­சாளர் தாஹிரின் தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்­தில் அத்­த­கைய குரல்­களைக் கேட்க முடிந்­­ததைச் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவ்­வாறு முஸ்லிம் காங்­கிரஸ் மீது ஆரம்ப காலப் போரா­ளிகள் கொண்­டுள்ள அதி­ருப்­திக்கும் அவர்­களின் உணர்­வு­களில் ஏற்­பட்­டுள்ள அதிர்­வு­க­ளுக்கும் பல்­வேறு  கார­ணங்கள் இருப்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது. நாட்டின் சம­கால அர­சியல் நீரோட்டத்தில் காணப்­ப­டு­கின்ற அர­சி­ல­மைப்பு மாற்றம் அல்­லது உரு­வாக்கம், தேர்தல் முறை­மையில் மாற்றம், உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான எல்­லை­நிர்­ணயம், அர­சியல் தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் என்­ப­வற்றில் ஓர­ளவு கட்சி சார்பில் அக்­கறை  செலுத்­தப்­பட்­டாலும் இந்­நாட்டு முஸ்­லிம்கள், குறிப்­பாக கிழக்கு வாழ் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பில் இக்­கட்சி முழு­மை­யாக அக்­கறை செலுத்­த­வில்லை என்ற குற்றச்சாட்டின் உணர்­வு­கள்­தான் இக்­கட்­சி­யையும் கட்­சியின் தலை­மைத்­து­வத்­தையும் மக்கள் மன்றில் நிறுத்­தி­யி­ருக்­கி­றது. இக்­கட்­சியை வளர்த்­தெ­டுத்த கிழக்கு மக்கள் மத்­தியில் அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலை ஏற்­பட்­டுள்­ள­போ­திலும், கட்சித் தலை­மையும் கட்­சியும் சுய­வி­சா­ர­ணையை மேற்­கொள்ள முன்­வ­ராமை கவ­லை­ய­ளிக்­கி­றது. மக்கள் மத்­தியில் ஏன் இவ்­வா­றான அதிர்­வுகள் ஏற்­பட்­டி­ருக்­கி­ன்றன? இவ்­வ­திர்­வு­களை எவ்­வாறு நீக்கி கட்­சியைப் பலப்­ப­டுத்தி அர­சியல் பலத்தை தக்க வைத்­துக்­கொள்ள முடியும் என்று சுய­வி­சா­ரணை மேற்­கொள்­வ­தற்கு பதி­லாக பிரம்­பெ­டுத்து அடிக்க வேண்டும் என்ற நகைச்­சு­வை­யான பேச்­சுகள் ஆரோக்­கி­ய­மற்­ற­தாக அமையும் என்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வது அவசி­ய­மாகும். அது­மாத்­தி­ர­மின்றி, மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காத தலை­மை­களும் கட்­சி­களும் காணாமல் போன வர­லா­றுகள் பல­வுண்டு என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ளச் செய்­வதும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது.

தனித்­துவ சமூ­கத்­துக்­கான உரி­மை­களைப் பெற்று இந்­நாட்டில் முஸ்­லிம்கள் நிம்­ம­தி­யாக வாழ வேண்­டு­மாயின் அர­சியல் சக்­திகள் ஒன்­று­ப­டு­வது மாத்­தி­ர­மின்றி பலம்­பெ­று­வதும் அவ­சி­ய­மாகும். இந்த அவ­சி­யத்தை உண­ரா­து சிறு­பிள்­ளைத்­த­ன­மான பேச்­சுக்­க­ளையும் அறிக்­கை­க­ளையும் விட்­டுக்­கொண்டு ஆண­வத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு கட்­சி­களும் தலை­மை­களும்  முயற்­சிக்­கு­மாயின் முஸ்­லிம்­களுக்கும் பல்­வேறு  கார­ணங்கள் இருப்­பதை நிரா­க­ரிக்க முடி­யாது.

நாட்டின் சம­கால அர­சியல் நீரோட்டத்தில் காணப்­ப­டு­கின்ற அர­சி­ல­மைப்பு மாற்றம் அல்­லது உரு­வாக்கம், தேர்தல் முறை­மையில் மாற்றம், உள்­ளூராட்சி சபை­க­ளுக்­கான எல்லைநிர்ணயம், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் என்பவற்றில் ஓரளவு கட்சி சார்பில் அக்கறை  செலுத்தப்பட்டாலும் இந்நாட்டு முஸ்லிம்கள்; குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இக்கட்சி முழுமையாக அக்கறை செலுத்தவில்லை என்ற குற்றச் சாட்டின் உணர்வுகள்தான் இக்கட்சியையும் கட்சியின் தலைமைத்துவத்தையும் மக்கள் மன்றில் நிறுத்தியிருக்கிறது. இக்கட்சியை வளர்த்தெடுத்த கிழக்கு மக்கள் மத்தியில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம்  பிரகாசமற்றுப்போவதுடன் மாற்றுத் தலைமைகளும் கட்சிகளும் உருவாகுவதைத் தவிர்க்க முடியாது  கிழக்கு உணர்வுகளின் அதிர்வுகள் புலப்படுத்தி நிற்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகும்.
Previous Post Next Post