சற்றுமுன்னர்: முஸ்லிம் ஒருவருக்கு அம்பாறையில் சரமாரி தாக்குதல்

NEWS


File Image : Ampara Town

சிலோன் முஸ்லிம் சுழற்சி நிருபர்

அம்பாறை நகரை அண்டிய குழத்தாவடி சந்தியி்ல் அம்பாறையிலிருந்து அட்டாளைச்சேனை நோக்கி வந்த படி ரக வாகனம் மற்றும் சாரதி மீது வெள்ளை வானில் வந்த  கும்பலொன்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது சிலோன் முஸ்லிம் சுழற்சி நிருபர் சற்று முன்னர் தெரிவித்தார்.

இரவு 8.00 மணி வேளை டைலஸ் மாபிள்  அட்டாளைச்சேனையிலிருந்து கொண்டு சென்று அம்பாறையில் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய நிஹால் எனும் சாரதிக்கும் அவரின் வாகனத்திற்கும் சரமாரி தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக எமது நிருபர் மேலும் தெரிவித்தார்.

காயங்களுக்குள்ளான சாரதி முஹம்மட் நிஹால் தமண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் பலமுறை முஸ்லிம் இளைஞர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, ஐந்து பேரடங்கிய குழுவே வேனில் வந்ததாகவும் வந்தவர்கள்  தலையில் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
6/grid1/Political
To Top