வில்பத்து வடக்கில் அமைந்துள்ள பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் அவசரமாக கையொப்பமிட்ட வர்த்தமானி அறிக்கை முஸ்லிம்களை ஏமாற்றத்துள்ளாக்கியுள்ளது. இதனை வாபஸ் பெறுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசிய தலைவர் பீ.எம் பாரூக் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே முஸ்லிம்கள் இந்த ஜனாதிபதியையும் நல்லாட்கியையும் பதவிக்கு கொண்டு வருவதற்கு பகீரதப் பிரயத்தனம் பட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதாகத் தெரியவில்லை.
வில்பத்து தொடர்பாக எடுக்கப்படும் பிரசாரங்கள் பொய்யானவை என்றும் முஸ்லிம்கள் ஒரு அங்குலக் கணியைக் கூட அபகரிக்கவில்லை என்றும் நிருபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உரிய ஆவணங்களுடன் பூர்வீகமாக வாழ்ந்து வந்த முஸ்லிம் தரப்பினருடன் எவ்வித கலந்துரையாடல்களோ, விசாரனைகளோ, இன்றி கடும் போக்காளர்களினதும், இனவாத கும்பல்களினதும், இனவாத ஊடகங்களினதும் விருபத்துக்கு ஏற்ப ஜனாதிபதி செயல்பட முனைந்திருப்பது கவலைக்குறிய விடயமாகும்.
உத்தேச பிரகடனம் தொடர்பாக எதிர்பார்புகள் இருப்பின் இரு வாரங்களுக்குள்ளாகத் தெரிவிக்குமாறு முசலி பிரதேச செயலகம் தெரிவித்திருந்தும் அக்கால அவகாசம் முடிவதற்குள்ளாக ஜனாதிபதி நாடு திரும்பும் வரை பொறுத்திராது ரஷ்யாவில் இருந்து கொண்டே அவசரமாக இவ்வர்தமாணி பிரகடனத்துக்கு கையெழுத்திட்டுள்ளமை இது திட்டமிட்ட சதி என்பதாக கருத வேண்டியுள்ளது.
ஆதலால் இந்த ஜனாதிபதியின் மூலமும் அரசாங்கத்தின் மூலமும் நீதியையும் விமோசனத்தையும் எதிர்பாத்த முஸ்லிம்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி உள்ளார்கள். இதற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த வர்த்தமாணி அறிவித்தலை உடன் வாபஸ் பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் வேதனைக்குள்ளாகிருக்கும் இவ்வேளையில் மேலும் 3000 ஏக்கர் காணி இதில் உள்ளடக்படல் வேண்டும் என்று ஒரு பௌத்த அமைப்பால் விடுக்கப்பட்டிருக்கும் கோரிக்கையும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியுள்ளது. அதே நேரம் முஸ்லிம் கவ்ன்சில் ஓப் ஸ்ரீலங்கா இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கு தமது சம்மேளனத்தின் பூரன ஒத்தழைப்பு நிச்சயம் கிடைக்கும் எனவும் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலை தொடர்பாக சம்மேளனம் அவசரமாக கூடி ஆராயவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.