பஷீர் சேகுதாவூதிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை; வாக்குமூலம் பதிவு

NEWS
0 minute read


முன்னாள் அமைச்சரும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளருமான பஷீர் சேகுதாவூதிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தாருஸ்ஸலாம் கட்டிட விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட் செய்த முறைப்பாட்டுக்கமையவே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.

தெமட்டகொடையிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமையகத்திற்குச் சென்ற பஷீர் சேகுதாவூத் அங்கு சில மணி நேரம் வாக்குமூலமளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
6/grid1/Political
To Top