ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை இன்று மாலை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ஜுமாதல் ஆகிர் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்து இன்று புதன் கிழமை மாலை மஃரிபுடன் புனித ரஜப் மாதத்தை ஆரம்பிப்பதென பிறை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிறை குழுக்களின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு கலாச்சார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரால் அத்தீர்மானம் ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை ஹிஜ்ரி 1438 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை பார்க்க வேண்டிய நாள் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி வியாழன் மாலை எனவும் பிறைக் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.