ஹசன் அலியை இயக்குவது பஷீர் தான் என்கிறார் தவம்

NEWS

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் முன்னாள் செயலாளர்  ஹசன் அலி, பஸீர் சேகுதாவுதின் நிகழ்ச்சி நிரலுக்கே இயங்குகின்றார் என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின்  உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.

மருதமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் மேலும் உரையாற்றிய அவர், யார் முஸ்லிம் காங்கிறஸ் கட்சியை இயக்குகின்றார்களோ அவர்களுக்கு தேவைப்பட்ட பிரகாரம் முஸ்லிம் காங்கிறஸ் கட்சியை அடிபணிய வைக்கலாம் என்பதற்காகவே ஹசன் அலி தவிசாளர் பதவியும் தேவையில்லை. தருவதாக இருந்தால் முழு அதிகாரத்துடனான செயலாளர் பதவியை தரவேண்டும் எனக் கோரினார்.

பசீர் சேகுதாவுத் அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கும் கட்சிக்கும் தெரியாமல் அமைச்சுப்பதவியை எடுத்துக்கொண்டுவந்தார். நடைபெற்று முடிந்த எல்லாத் தேர்தல்களின் போதும் கட்சிக்கு எதிராக செயற்பட்டார். இந்த சந்தர்பத்திலெல்லாம் கட்சிக்குள் மிகமோசமான ஒருவரை வரைவைத்திருக்கிறோம் என பசீர் சேகுதாவுதை மிகமோசமாக கூறிய ஹசன் அலி இப்போது திரைக்குமறவில் பசீர் சேகுதாவுதின் நிகழ்ச்சிநிரலுக்கு இயங்குகின்றார் என்றும் தவசம் மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.
6/grid1/Political
To Top