Top News

காலவதியான தேசிய பட்டியலும் அது தரப்போகும் இழப்புகளும்



ஆதம்பாவா அன்வர்

அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் MP தருவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசால் வாக்குறுதி அளிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்தும் இது வரையும் கிடைக்கவில்லை குழுக்களின் சில குறுக்கீடுகளும் கட்சிக்குள் இருந்தாலும் தலைமையால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன ஆனால் அட்டாளைச்சேனை தேசிய பட்டியல் சமாச்சாரம் மாத்திரம் இழுத்தடிக்கப்பட்டு வந்தன அப்படி என்றால் தலைவர் அவர்களால் அளிக்கப்பட வாக்குறுதி பொய்யாக இருந்திருக்கவேண்டும் கட்சிக்குள் தொடர்ச்சியாக தேசிய பட்டியலை சுவைத்தவர்களையும் கட்சியின் முக்கிய பதவி வகித்தவர்களையும் தலைமை தூக்கி வீசியிருக்கிறது அப்படியான அதிகாரம் நிறைந்த தலைமையை வகித்த நீங்கள் அட்டாளைச்சேனைக்குறிய தேசிய பட்டியலை கொடுத்திருக்க வேண்டும் கட்சியிடம் MP கேட்டு வந்தவர்கள் எத்தனை குழுவானாலும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள் தான் அதனை யாருக்காவது கொடுத்திருக்க வேண்டும் தலைமைக்கே கொடுக்க விருப்பம் இல்லாததால் MP கேட்டு வரும் குழுக்களிடம் பழியை போட்டு தப்பித்து கொள்வதை தலைமை செய்து வந்திருக்கிறது கட்சியானது இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டதால் தேசிய பட்டியலுடைய காற்று வீச தொடங்கியுள்ளது இந்த காற்றானது இந்த காலத்திற்கு பொருத்தமான காற்றாக இது அமையாது இது கட்சிக்கு புயலாக மாறகூடிய காற்றாகவே அமைவதில் சந்தேகமில்லை கட்சியில் உட்பூசல் நிறைந்த காலம் கட்சிக்குள்ளே பல குழுக்கள் பல மேடைகள் இதில் சுய நலமும் உண்டு பொது நலமும் இல்லாமலும் இல்லை இப்படியான இக்கட்டான நிலையை தலைமை சிந்திக்காமல் MP கொடுக்கப்ட்டால் பதவியை எதிர் பார்த்து ஏங்கி தவிப்பவர்கள் மற்ற குழுக்களோடு இணைவதில் தாமதிக்கமாட்டார்கள் இதனால் கட்சிக்கு இக்கட்டுகள் கூடிக்கிட்டே செல்லும் வாக்குறுதி அளிக்கப்பட்ட தேசிய பட்டியல் கொடுப்பதற்கான காலம் கணிந்தாலும் அது கட்சிக்கு ஆரோக்கியத்தை தராது வாக்குறுதி அளிக்கப்பட்ட உடனே தேசிய பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தால் கட்சியின் ஆரோக்கியம் மேலோங்கி இருக்கும் தலைமையின் வாக்குறுதியும் காலவதியை எட்டியிருக்காது.
Previous Post Next Post