Top News

சில்லறையாக சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை



சில்லறையாக சிகரெட் விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்டங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தில் இன்று (திங்கட்கிழமை) கைச்சாத்திட உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மல்வானை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்:
“புகைப்பொருட்களைக் குறைக்கும் நோக்கிலேயே குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக புகைத்தல் பழக்கத்தை மட்டுப்படுத்துவதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். புகையிலைப் பொருட்களின் பாவனை காரணமாக நோய்வாய்ப்பட்டவர்களுக்காக வருடாந்தம் 72 பில்லியன் ரூபா வரையில் செலவிடப்படுகின்றது” எனத் தெரிவித்தார்.
Previous Post Next Post