கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் புதிய காரியாலயம் 2017.03.11ஆந்திகதி-சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.ஐ. இம்ந்தியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் விஷேட அதிதியாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர்.
மேலும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன, மத பேதங்களுக்கப்பால் தன்னாலான சேவைகளை அனைத்து இன மக்களும் பயன்பெரும் வகையில் சேவையாற்றிவரும் நபர் என்ற வகையில் இந்நிகழ்வின்போது அல்-அக்ஸா விளையாட்டுக் கழகத்தின் சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.