சட்டதிட்டங்களை மீறிய நிறுவனமே சைட்டம் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியன், பிரதி செயலாளர் அனுரபிரதிப் தெரிவித்துள்ளார்.
சைட்டம் பிரச்சனை தொடர்பாக, ஜாதிக ஹெல உறுமய கட்சியினால் எடுக்கப்பட்ட இறுதி தீர்மானம் தொடர்பில், தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்று அக்கட்சியின் அலுவலகத்தின் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இதன்போது தொடர்ந்து பேசிய அவர், “காலத்தை நீடிக்காமல் சைட்டம் தொடர்பில் விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டும். சைட்டம் சட்டதிட்டங்களை மீறியே ஆரம்பிக்கப்பட்டது இது தொடர்பில் நாங்கள் பல ஆதாரங்களை வெளியிட்டிக்கிறோம்.
மாணவர்களை சைட்டத்திற்கு அனுப்ப வேண்டாம் என் வைத்திய சபை பல முறை பெற்றோர்களிடம் கேட்டுக்கொணடது. ஆனால், 1000 இற்கும் மேற்பட்ட மாணவர்களை, பெற்றோர்கள் சேர்திருக்கிறார்கள்.மேலும் வருடத்திற்கு இரண்டுமுறை 15 குழுக்கள் உள்வாங்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.