Top News

அ.இ.ம.கா.வும் மு.கா.வும் ஜே.வி.பி.யை சந்­தித்­தன

File Image 


எஸ்.எம்.எம்.முர்ஷித் 

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் உள்­ளூ­ராட்சி எல்லை மீள் நிர்­ணயம் தொடர்பில் முஸ்­லிம்­காங்­கி­ரஸும் மக்கள் விடு­தலை முன்­னணி(ஜே.வி.பி.)யை சந்­தித்­துள்­ளன.  
எல்லை மீள்­நிர்­ணயம் தொடர்பில் எழுந்­துள்ள பிரச்­சினை கார­ண­மாக உள்­ளூ­ராட்சித் தேர்தல் தாம­த­மா­கு­மானால்,  அந்தத் தேர்­தலை நடை­மு­றை­யி­லுள்­ள­வாறு அவ­ச­ர­மாக நடாத்­து­வ­தற்கு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு பணிக்­கு­மாறு  ஜனா­தி­ப­தி­யையும்,பிர­த­ம­ரையும் சந்­தித்து சிறு­பான்மைக் கட்­சி­களும், சிறிய கட்­சி­களும் வேண்­டுகோள் விடுப்­பது சிறந்­த­தென்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி என்­பன ஆலோ­சனை நடாத்­தி­யுள்­ளன.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அனுர குமார திஸா­நா­யக்க, அக்­கட்­சியின் செய­லாளர் ரில்வின் சில்வா ஆகி­யோ­ருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்­கட்­சியின் பிரதிச் செய­லாளர் நாயகம் சட்­டத்­த­ரணி நிசாம் காரி­யப்பர் ஆகி­யோ­ருக்கும் இடையில் நேற்­று­முன்­தினம் புதன்­கி­ழமை மாலை நடை­பெற்ற சிநே­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டலின் போதே இது­பற்றி கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இச்­சந்­திப்பு அமைச்சர் ஹக்­கீமின் இல்­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதன்­போது உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு, உள்­ளூ­ராட்சித்  தேர்தல் என்­பன போன்ற விட­யங்கள் பற்றி கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் நடந்­துள்­ளன. இவை­பற்றி பொது­மக்கள் மத்­தியில் தெளி­வற்ற தன்­மையும்,குழப்­ப­மான  நிலையும் காணப்­ப­டு­வதால் போதிய விளக்­க­ம­ளிக்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யமும் வலி­யு­றுத்­தப்­பட்­டது.     

இதே­வேளை, அர­சியல் யாப்பு மறு­சீ­ர­மைப்பு தொடர்­பாக மக்கள் விடு­தலை முன்­னணிக் கட்­சிக்கும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சிக்கும் இடை­யி­லான கலந்­து­ரை­யாடல் கடந்த திங்கட்கிழமை மக்கள் விடு­தலை முன்­னணி கட்­சியின் காரி­யா­ல­யத்தில் இடம்பெற்­றது.

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர்  அநு­ர­கு­மார திஸா­நா­யக்க, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் தேசிய தலை­வரும் அமைச்­ச­ருமான றிஷாட் பதி­யுத்தீன், தவி­சா­ளரும் பிரதி அமைச்­ச­ரு­மான  எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் நவவி, செய­லாளர் நாயகம் சுபைர் தீன்,  சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், முன்னாள் பிரதி அமைச்சர் ஹுஸைன் பைலா, மேல் மாகாண சபை உறுப்­பினர் பாயிஸ்,  மரைக்கார்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசியல் யாப்பு மறுசீரமைப்பினால் சிறுபான்மை மக்களுக்கு ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்கள் பற்றி ஆராயப்பட்டதாக பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 
Previous Post Next Post