Top News

உ.பி. தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட வாய்ப்பு தராத பாரதீய ஜனதா கட்சி, அங்கு நான்கில் மூன்று பங்கு வெற்றி பெற்று இமாலய சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
இஸ்லாமியர்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
பாரதீய ஜனதா கட்சி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளின் நிலைமை குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை.
பகுஜன் சமாஜ் கட்சி அதிக அளவிலான முஸ்லிம் வேட்பாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியிருந்தது. தேர்தல் முடிவுகளும் மக்களின் மனப்பான்மைகளும் நிதர்சனமாக தெரியவந்த பிறகு, தேர்தல் முடிவு குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள்?
அமீக் ஜமாயி சொல்கிறார், "பிஹாரைப் போன்று மகா கூட்டணி உருவாகாதது தான் உத்தரப்பிரதேசம் இந்துத்துவா கொள்கை வழி செல்வதற்கான முக்கிய காரணம். அகிலேஷ் யாதவிற்கு, தேர்தலில் மேம்பாடு கிடைக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, போட்டியிட வாய்ப்பளித்து, மக்கள் தவறான ஆலோசனை வழங்கிவிட்டனர். அதேவேளையில், பாரதீய ஜனதா கட்சி, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரிடம் இருந்தே வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது, அந்தக் கட்சி சமூக ஆய்வு செய்து இந்த மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.
இஸ்லாமியர்கள்
மொஹம்மத் ஜாஹித் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் வாக்காளர்கள், பாரதிய ஜனதா கட்சியை நோக்கி ஈர்க்கப்படுவதற்கான சமிக்ஞைகளை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இஸ்லாமிய வாக்காளர்கள் மீது அதிக கவனத்தை காட்டும் இந்த இரண்டு கட்சிகளும், பிற பாரம்பரிய வாக்காளர்கள் பாரதீய ஜனதா கட்சியை நோக்கி செல்வதை தடுக்க முடியவில்லை என்று எழுதியுள்ளார்.
மொஹம்மத் காலித் ஹுஸைனின் கருத்து இது - "உத்தர்பிரதேசத்தில், பாரதீய ஜனதாவின் அரசியல் நடவடிக்கைககளில் அது மேற்கொண்ட அரசியல் தந்திரம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றியானது, தற்போது நாட்டில் நிலவும், ஏழ்மை, வேலையின்மை, பட்டினி போன்ற பிரச்சனைகளை விட கல்லறைகளும், ஆலயங்களுமே முக்கியமாகி போய்விட்டதை காட்டுகிறது".
மொஹம்மத் உஸ்மான் ஆதங்கத்துடன் எழுதியிருக்கிறார், "காவல் நிலையத்தில் இரண்டு இஸ்லாமிய போலீஸ்காரர்கள் தேவை என்பதை விட 18% இட ஒதுக்கீடுதான் தேவை என்று சொன்னவர்களை காவல் நிலையம் சென்று ஒரு முதல் தகவல் அறிக்கையை இப்போது பதிவு செய்து காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்?"
ஷாத்மான் அலியின் கருத்து இது, "பகுஜன் சமாஜ்வாதி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு முஸ்லிம்கள் வாக்களித்திருந்தாலும், தலித், யாதவ் உட்பட பிற பிரிவினர் பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களித்துவிட்டனர்".
உத்தரப்பிரதேச சட்டமன்றம்
"பிஹாரில் இஸ்லாமியர்கள் ஒன்றுபட்டுள்ளனர், மதட்சார்பற்றவர்கள் ஒன்றுபட்டுள்ளனர், ஆனால் உத்தரபிரதேசத்தில் பிரிந்துவிட்டார்களா இல்லை பிரிக்கப்பட்டனரா?" என்று கேள்வி எழுப்புகிறார் அலி கான்.
"இஸ்லாமிய வாக்காளர்கள் துரோகமிழைத்துவிட்டதாக மாயாவதி சொன்னார், ஷீலா தீட்ஷித்தும் சொன்னார், இனிமேல் அகிலேஷும் அதே துரோக முத்திரையை குத்துவார்" என்கிறார் அலி சோஹ்ராப்.
"வகுப்புவாத அரசியலின் ஒரு புதிய பரிசோதனைக் களமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது" என்கிறார் அஃப்ரோஜ் ஆலம் சாஹில்.
சல்மான் சித்திக்கியின் கருத்துப்படி, "ஜாதியின் அடிப்படையில் இல்லாமல், இந்த முறை மதத்தின் அடிப்படையில் வாக்களிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த அனைத்தும் வார்த்தைகளாகவே நின்றுவிட்டது!"
Previous Post Next Post