இக்பால் அலி
எமது முஸ்லிம்களுடைய கல்விப் பணியில் வலுவானதும் வரலாற்று பெறுமதிமிக்க தடயங்ளைக் கொண்ட பேருவளை ஜாமியாஹ் நளீமியாவின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் ஹைருல் பஷர் நளீமி அவர்களுடைய வபாத்தான செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கமும் ஆச்சரியமும் அடைந்தேன். அந்நாரது இழப்பு முஸ்லிம் கல்வியியல் சமூகத்திற்கு பேரழிப்பாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
ஜாமியாஹ் நளீமியாவின் உதவிப் பணிப்பாளர்களில் ஒருவரும் சிரேஷ்ட விரிவுரையாளரும் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான அஷ்ஷெய்க் ஹைருல் பஷர் ஜனாஸா தொடர்பாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் எகிப்தில் கெய்ரோவில் இடம்பெற்ற சுப்ரின் கவுன்சில் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற வேளையில் அங்கு கிடைத்த ஜனாஸா தொடர்பான தகவலை அடுத்து அந்நாட்டில் இருந்து கொண்டு தமது அனுதாபச் செய்தியை ஊடகங்களுக்குத் தெரிவித்தபோது அமைச்சர் ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி சுக்ரி அவர்களுக்கு பக்க துணையாக இருந்து மாணவர்களின் கல்வி நலனிலும் வளாச்சியிலும் எழுச்சியிலும் ஹைருல் பஷர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. அதே போன்று சிறந்த எழுத்தாற்ற பேச்சால் மிக்கவராகவும் விளங்கினார் இவை போன்று வழிகாட்டல், தலைமைத்துவப் பண்பு. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டவர். அந்நாரது இழப்பு எமது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் பேரிழப்பாகும்.
எனவே அவரது இழப்பால் துயரில் ஆழ்ந்துள்ள மனைவி, பிள்ளைகள், குடும்பம் மற்றும். நளீமியா மாணவர் சமூகம் உள்ளிட்ட அனைவருக்கும் பொறுமையையும் மன அமைதியையும் அல்லாஹ் வழங்க வேண்டும் எனவும் உயரிய சுவனத்தை அடைய எல்லா வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.