சேகு - செய்தி ஆசிரியர்
தம்புள்ளை பள்ளிவாசலுக்கு 40 பேச்சஸ் காணி தருவதாக சொன்னோம். அந்த காணியில் பள்ளியை நிர்மாணித்துக்கொள்வதே நல்லது என முஸ்லிம்களிடம் வேண்டிக்கொள்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிலருக்குமிடையேயான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பிலுள்ள மஹிந்தவின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அன்று நாம் காணி தருவதாக குறிப்பிட்டோம். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தம்புள்ளை விகாராதிபதியும் அவ்வாறு காணி வழங்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். அதனை நீங்கள் மறுத்தீர்கள்.
இன்று பள்ளியை புதிய இடத்திற்கு மாற்றிக்கொள்வதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளலாம் என்றார்