Top News

உலமா சபையின் நிலைப்பாடு மாறுமா?

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களைச் செய்­ய­ வேண்டிய அவசியமில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யின் தலைவர் ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. எஎனினும் இந்த விடயத்தில் உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் மிகவும் நிதா­ன­மாக சிந்­திக்க வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். முஸ்லிம் தனியார் சட்­டத்தில் ஏரா­ள­மான குறை­பா­டுகள் இருப்­பதன் கார­ண­மாக அதில் திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்டும் என கடந்த இரு தசாப்த கால­மாக கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வந்­தன. இதற்­க­மை­வா­கவே 2009 ஆம் ஆண்டு அப்­போ­தைய நீதி­ய­மைச்­சரால் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு ஒன்றும் அமைக்­கப்­பட்­டது. அக்­குழு தற்­போது தமது அறிக்­கையை பூர­ணப்­ப­டுத்தும் இறுதித் தறு­வாயில் உள்­ளது. இந் நிலையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் தேவையில்லை எனக் கோரு­வது ஆரோக்கியமானதல்ல. மாறாக ஷரீ­ஆ­வுக்கு முர­ணான வகையில் எந்­த­வித திருத்­தங்­களும் இடம்­பெறக் கூடாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதே எமது கடப்­பா­டாகும். நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிர­தி­நி­திகள் ,கல்­வி­மான்கள் ,முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களே அங்கம் வகிக்­கின்­றனர். இவர்கள் ஒரு­போதும் ஷரீ­ஆ­வுக்கு முர­ணான திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­யவோ அதற்கு உடந்­தை­யா­கவோ இருக்கப் போவ­தில்லை. 1951 ஆம் ஆண்­டுக்குப் பிற்­பாடு முஸ்லிம் தனியார் சட்டம் திருத்­தப்­ப­டா­ததன் கார­ண­மாக திரு­மண விவ­கா­ரங்கள் மற்றும் காதி நீதி­மன்ற செயற்­பா­டு­களில் பாரிய குறை­பா­டுகள் நில­வு­வதை அன்­றாடம் காண முடி­கின்­றது. குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் இதனால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். இது பாரிய சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வித்­திட்­டுள்­ளது. என­வேதான் இவற்­றுக்குத் தீர்வு காண வேண்­டு­மாயின் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்ட வகையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுவது அவசியமானதாகும். இதற்கான ஒத்துழைப்புகளை வழங்க வேண்டியது சமூகத்தின் கடப்பாடாகும்.மாறாக திருத்தமே தேவையில்லை என வாதிடுவது ஒருபோதும் அறிவுடைமையாகாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.
Previous Post Next Post