Top News

முஸ்லிம்கள் மதுபான சாலைக்கு குடிக்க வந்தால் கட்டி வைத்து பள்ளிவாயலில் ஒப்படைப்பேன்


Ceylon Muslim Kattankudi Correspondent 
முஸ்லிம் மக்கள் குடித்து விட்டு அழியட்டும் என முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் என்னிடம் கூறினார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் சனிக்கிழமை(25.3.2017) நடைபெற்ற ஆர்ப்பாட்த்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் முஸ்லிம் மக்களும் மதுபான சாலைகளினால் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களும் மது அருந்துகின்றார்கள். முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனோடு இந்த வரழைச்சேனையிலுள்ள இரண்டு மதுபான சாலைகளை அகற்ற வேண்டும் என நடவடிக்கை எடுத்த போது இந்த மதுபானசாலைகள் பற்றி பிரச்சினை போடாதீர்கள். ஏனென்றால் அருகிலுள்ள முஸ்லிம் மக்கள்தானே குடிக்கின்றார்கள். அவர்கள் குடித்து விட்டு அழியட்டும் என்று என்னிடம் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் கூறினார்.

நான் அவ்வாறு சிந்திக்க மாட்டேன் எல்லோரும் மனித இனம் எல்லோரும் எங்கள் உறவுகள்.

யுhராக இருந்தாலும் இந்த மதுபானத்தினால் சீரழிய இடமளிக்க முடியாது.

முஸ்லிம் மக்களும் மதுபானம் அருந்த வருகின்றார்கள். அவர்களை அங்கு கட்டிவைத்து அவர்களை பள்ளிவாயலில் ஒப்படைப்பேன் என முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளிடம் நான் கூறியிருக்கின்றேன்.

இவ்வாறு குடித்து விட்டு ஆண்மீகத்துக்கு குந்தகம் விளைவிப்பதற்கும் கலாசாரத்தை சீரழிப்பதற்கும் யாராக இருந்தாலும் இடமளிக்க கூடாது.
மக்கள் ஆண்மீக ரீதியாகவும் உடல், உள ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்கள்.

கல்குடா பிரசேத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள மதுபானச உற்பத்திசாலையை உடனடியாக மூட வேண்டும். இல்லா விட்டால் மக்கள் போராட்டம் கடுமையாக வெடிக்கும். இதன் விளைவை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எதிர் கொள்ள வேண்டி ஏற்படும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யுத்தத்தினால் மக்களை அழித்த போல தற்போது மதுபான சாலைகளை நிறுவி மக்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தினையும் அழிக்க திட்டமிட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  குறைந்தது 20 இருக்க வேண்டிய மதுபானசாலைசகள் 50 மதுபான சாலைகள் இருக்கின்றன. அதே போன்று சுற்றுலா விடுதிகளில் மதுபான சாலைகள் இருக்கின்றன.

இதை தவிர கல்குடா தொகுதியில் கும்புறமூலை என்ற பகுதியில் ஒரு மதுபான உற்பத்தி சாலை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி முன்பு தொழிற்சாலைகளை ஸ்தாபித்தார்கள். ஆனால் தற்போதைய அரசாங்க காலத்தில் இருக்கின்ற தொழிற்சாலைகளை அழிக்கின்ற நிகழ்வு நடைபெற்று வருகின்றது.

வாழைச்சேனை தேசிய கடதாசி கம்பணி 3000 குடும்பங்களுக்கு வாழ்வளித்தது. 3000 பேர் அங்கு வேலை செய்தார்கள்.

அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கின்றார்கள். அந்த தொழிற்சாலையை மூடி விடம்டு சுற்றுலாவுக்கான ஒரு இடமாக ஒரு விளையாட்டு திடலை ஏற்படுத்தப் போகின்றார்கள்.

இதன் மூலம் 3000 பேரின் தொழில் வாய்ப்பு இல்லாமல் செய்யப்படுகின்றது.

இந்த இடத்தி;ல் நான் ஜனாதிபதியை குறை கூற மாட்டேன். உண்மையில் அவர் தெரிற்சாலை வருவதை விழும்பகின்றார். ஆனால் இந்த மதுபான உற்பத்திசாலை திறக்கப்படுவதை எதிர்த்தோம் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இதற்கெதிரான தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்த கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்க கூடாது என நாங்கள் பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் வழங்கினோம். ஆனால் எந்த அனுமதியுமின்றி இந்த மதுபான சாலை கட்டிடம் கட்டப்பட்டு வந்துள்ளது. இதற்காக 19 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்திருக்கின்றார்கள்.

அர்ஜுன் மகேந்தரனின் மருமகனான அலோசியஸ் என்பவரே இதற்கான முதலீடு செய்து இந்த மதுபான உற்பத்தி சாலையை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வரியில்லாமல் பொருட்களை இறக்குமதி செய்தவற்கு வரி விலக்கு செய்துள்ளது.

இந்த மதுபான உற்பத்திசாலை உடனடியாக மூடப்படல் வேண்டும்.

மது பான உற்பத்திசாலை இடம் பெறுவதை அறிந்து அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது அங்கிருக்கின்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் என தன்னைத்தானே கூறிக் கொண்டிருக்கின்ற ஒருவரின் சகோதரர் தொடக்கம் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியிருக்கின்றார்கள். இதனை நாம் வண்மையாக கண்டிக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மதபான சாலைகள் பரிசீலனை செய்யப்பட்டு அது குறைக்கப்படல் வேண்டும்.

வாழைச்சேனை விபுலானந்த வீதியில் இரண்டு மதுபான சாலைகள் இருக்கின்றன. போட்டிக்கு மது விற்பணை நடைபெறுகின்றது. இவைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மக்கள் மீது அபிமானம் கொண்டிருந்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மதுபான சாலைகளை குறைத்து 15 மதபானசாலைகளாக வைத்துக் கொள்ள வேண்டும்.  அதற்கு மேலே வைக்க கூடாது என்றார்.
Previous Post Next Post