தாறுஸ்ஸலாம் தொடர்பான நுால் வெளியீடு இன்று சாய்ந்தமருதுவில் இடம்பெற்றது, இந்த நிகழ்விற்கு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட உயர்பீட உறுப்பினர் ஹனீபா மதனி பார்வையாளர்களோடு ஒருவராக அமர்ந்த காரணமென்ன? இது சதியா அல்லது அவருக்கு தகுந்த இடம் வழங்கப்படவில்லையா? அல்லது கட்சி மீது விரக்தியா? என்ற சந்தேக நிலை தோன்றியுள்ளது.
ஹசனலியின் நம்பிக்கை நட்சத்திரமான ஹனீபா மதனி ஹசனலியின் ஆதரவாளரை்களை அண்மையில் சந்தித்தும் பேசியும் வருகிறார். அண்மையில் ஹசனலி ஆதரவாளரும் ஹக்கீமுக்கு எதிராக அண்மைக்காலமாக மேடைகளில் பேசிவருபவருமான DIG நஸீருடன் கடந்த வாரம் மிக நீண்ட நேரமாக அட்டாளைச்சேனையில் வைத்து பேசிக்கொண்டு இருந்தார். இந்த வேளை கபூர் லோயரும் இருந்தார். இதன்போது எமது செய்தியாளரின் கெமராவின் கண்களில் பட்ட காட்சி இணைக்கப்பட்டுள்ளது.