Headlines
Loading...
தேசத்திற்கு பங்களித்த நான்கு முஸ்லிம்களுக்கு 'தேசிய விருது'

தேசத்திற்கு பங்களித்த நான்கு முஸ்லிம்களுக்கு 'தேசிய விருது'

சிலோன் முஸ்லிம் விஷேட செய்தியாளர்

தாய்நாட்டுக்காக உன்னதமான பணியில் ஈடுபட்ட, உன்னதமான இலங்கையர்களுக்கு தேசிய விருது வழங்கப்படும் “தேசிய விருது விழா 2017” ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் திங்கட் கிழமை நடைபெற்றது. இதில் தேசத்திற்கு சேவையாற்றிய 89 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விருதைப் பெற்றவர்களில் நால்வர் முஸ்லிம்களாவர்.

அச்சி முகம்மது இஷாக்( ஸ்ரீ லங்கா சிகாமனி விருது), அப்பாஸ் அலி அக்பர் அலி (தேசமான்ய விருது),  ஜீ.கே.டீ. மொஹமட் (கலா கீர்த்தி விருது), அஹமத் மும்தாஸ் மசூன் காஸிம் (வித்யா நிதி விருது ) ஆகிய நால்வரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட முஸ்லிம்களாவர்.

தேசத்தின் பெருமை மற்றும் தாய்நாட்டின் மாண்பினை உயர்த்துவதற்காகவும், தேசத்தின் உன்னதமான கௌரவம் மற்றும் முன்னேற்றத்துக்காகவும் தம்மை அர்ப்பணித்த முதன்மையான இலங்கையர்கள் இந் நிகழ்வில் தேசிய விருதுகளைப் பெற்றனர்.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த தேசிய விருது வழங்கும் விழாவில் இலங்கைக்காக சிறப்பாக சேவையாற்றியுள்ள 89 இலங்கை பிரஜைகளுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன. 

பிரதரமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.