Top News

செல்லமே திரையரங்கு திறப்பு விழா அதிதியான முஸ்லிம் அரசியல் தலைமை!



சமூகரீதியான   பிரச்சினைகள்  ஏற்படுகின்றபோது அரசியல்  தலைமைகளே  சமூகத்துக்கு  வழிகாட்டியாக   செயற்பட வேண்டிய கடமையும்  சமூகப் பொறுப்பும் உடையவர்கள்,

இதன்  மூலமே  சமூக ரீதியான போராட்டங்களில்  உரிய  தாக்கத்தினையும்  உந்துதலினையும் செலுத்தி அவற்றை மேலும்  வீரியத்துடன்  முன்னெடுக்க அரசியல்  தலைமைகளின்  பங்களிப்பு அவசியம் என்பது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.

இந்த நிலையிலேயே   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   வியாழேந்திரன் அமல்,யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோர்  மதுபானசாலைக்கு  எதிராக குரல்  எழுப்பி வருகின்றனர்,

ஆனால் கல்குடாத்தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும்  பிரதியமைச்சரும்  அகில   இலங்கை  மக்கள் காங்கிரஸின்  தவிசாளருமான  அமீர் அலி அவர்கள் தமது தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதியில்  அமையப் பெறும்  மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக  குரல் எழுப்பாமையும் அதற்கு எதிராய் ஒரு வார்த்தையேனும் பேசாமை  இன்று  சமூகத்தின் மத்தியில் பல்வேறு  சந்தேகங்களை  ஏற்படுத்தியுள்ளது,

கடந்த ஒரு கிழமைக்கும் மேலாக மதுபான உற்பத்திசாலைக்கு எதிராக மக்கள்போராட்டங்களை  முன்னெடுத்து வரும் நிலையில் அது குறித்து  வாய்திறந்தும் பேசாத  பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களால் அன்னை செல்லம்  திரையரங்கு கொடியேற்றத்துடன் திறந்துவைக்கப்பட்டது,

ஒரு  முஸ்லிம்  திரைப்படக்  காட்சிகளை  பார்ப்பதும் ஹராம்  மதுபானம் போன்ற போதைப் பொருட்களை  நுகர்வதும் ஹராமாக்கப்பட்டுள்ளது அதாவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

அவ்வாறாயின்போதைப் பொருள்  உட்கொள்ளும்  காட்சிகள் போன்றவற்றை காணபிக்கும் திரைப்படங்களை வெ ளியடும்  திரையரங்கினை  அமீர் அலி அவர்கள் திறந்துவைத்த்தன் மூலம்  போதைப் பொருளுக்கு எதிரான தமது  மறைமுகமான  ஆதரவை அவர் வெ ளிக்காட்டியுள்ளார்,

தியேட்டர்களை  திறந்து வைப்பதில் காலத்தை  கடத்தித்  திரியும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலி அவர்கள் இதுவரை  பல்லாயிரம் குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமாக உள்ள மதுபான சாலை குறித்து  இதுவரை  வாய் திறவாமை  அர்ஜுன்  அலோசியஸிடம் வாங்கிய பணத்துக்கு அவர் காட்டும் விசுவாசத்தினை வெளிக்காட்டினாலும்  தனக்கு வாக்களித்த  மக்களுக்கு  நம்பிக்கைத்  துரோகம் செய்து வருகின்றார்  என்பதே உண்மை.

அர்ஜுன்  அலோசியஸுக்கு எதிராக   பேசினால்  பிரதமரிடம் திட்டு வாங்க வேண்டி வரும் இல்லையென்றால் பிரதமரிடம்  நல்லபெயரெடுத்தால்  தான்   இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது  தமக்கு நல்ல  அமைச்சுப்பொறுப்பொன்றைப்  பெறலாம் என்ற மோகத்தில்  சமூகத்தின் பேரழிவையும் கணக்கிலெடுக்காமல் பதவிக்காக   சமூகத்தை  அடகுவைக்கும் அரசியல்  தலைமைகள்  நம் சமூகத்தின்  சாபக்கேடேயன்றி வேறில்லை.

கிழக்கில் டெங்குக்  காய்ச்சல்  பரவி  பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டபோது பிரதியமைச்சர்  அமீர் அலி அவர்கள் (back to school ) நிகழ்வுகளில்    கலந்துகொண்டு  கும்மாளமிட்டுக்கொண்டிருந்த்தை  புகைப்படங்களிலும்   வீடியோக்களிலும்  காண முடிந்த்து.

சமூகத்தில்   பிரச்சினைகள் தோன்றுகின்றபோது கும்மாளமடித்து  திரிபவராக ஒரு  கட்சியின் தவிசாளர்  இருக்கின்றாரென்றால் அந்தக்  கட்சி எவ்வாறு  சமூகப் பொறுப்புடன்  செயற்படும் என்பதை  மக்களின்  தீர்மானத்துக்கு விட்டு விடுகின்றேன்.

ஆகவே  இவ்வாறு  தமது  பதவிக்கு  வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளை   அடையாளங்கண்டு  எதிர்வரும் தேர்தல்கள் அவர்களுக்கு சிறந்த பாடத்தைக் கற்பிப்போம்,
Previous Post Next Post