Top News

மறிச்சிக்கட்டி பாதுகாக்கப்பட்ட வனமாக பிரகடனம்!


வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே உள்ள நான்கு வன பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிக்கையில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். இதற்கமைய இப் பிரதேசம் வன இலாகா திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஒப்பமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு வடக்காக அமைந்துள்ள வன பாதுகாப்பு திணைக்களத்துக்குரிய மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3ஏ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி பகுதிகளுக்குள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளும் உள்ளடங்குகின்றன. இது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை.
Previous Post Next Post