Top News

அம்பாறை உலமாக்கள் ஹக்கீமுடன் பேசியது என்ன?



சிலோன் முஸ்லிம் விசேட செய்தியாளர்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உலமாக்கள் சிலருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்குமிடையில் கடந்த புதன்கிழமை சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற இச் சந்திப்பில் கட்சியின் தற்போதை நிலை தொடர்பில் நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ளது.

கட்சியை ஒற்றுமைப்படுத்துவது பற்றியும் எழுந்துள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வது தொடர்பில் இச் சந்திப்பில் பங்கேற்ற உலமாக்கள் அமைச்சர் ஹக்கீமுக்கு ஆலோசனை வழங்கியதாக தெரிய வருகிறது.

அத்துடன் மு.கா. தலைவர் மற்றும் எம்.பி.க்கள் இஸ்லாமிய விழுமியங்களைப் பேணி நடக்க வேண்டும் என இதன்போது உலமாக்கள் அறிவுறை வழங்கியதாக இக் கூட்டத்தில் பங்கேற்ற மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உலமாக்களான மௌலவி எஸ்.எச்.ஆதம்பாவா, மௌலவி ஐ.எல்.எம்.ஹாசிம், மௌலவி ஏ.சி.எம்.ஹாசிம், மௌலவி அபூ உபைதா, மௌலவி பஷீர், மௌலவி நாசிர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.கா. சார்பில் அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு உலமாக்களே தவிர அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள் அல்ல என அறிய முடிகிறது.
Previous Post Next Post