எம்.எப்.எம்.பஸீர்
காத்தான்குடியில் இரு முஸ்லிம் குழுக்களுக்கு இடையிலான மோதல் சம்பவத்தின் போது சர்வதேச தீவிர வாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக ஒரு குழு கோஷங்களை எழுப்பியவாறு தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மதத்தின் பெயரால் தீவிரவாதம் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய உளவுத் துறையானது தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கும் எனவும் அதன் ஊடாக சர்வதேச தீவிரவாதிகளான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் உள்ளூரில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் இடையிலான் தொடர்பு குறித்து விசாரணைகள் நடத்தப்பட சாத்தியம் உள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இரு குழு மோதல் தொடர்பில் 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் நிலையில் மோதலின் பின்னணி, நோக்கம் குறித்தும் மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக சிறப்புக் குழுக்கள் விசாரணை செய்து வருகின்றன.