ஜெனீவாவில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினை எதுவும் முன் வைக்கப்படவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரசின் எழுச்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இக் கூட்டத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர், இலங்கையில் யுத்தத்தினால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு சொல்லப்பட வில்லை.
முஸ்லிம்கள் ஒன்று பட்டு தமது தரப்பு நியாயங்களையும் கோரிக்கைகளையும் இலங்கைக்கும் சர்வசேத்திற்கும் முன் வைக்க முன் வராமல் தமக்குள் தனிமனித அரசியலை செய்து முட்டி மோதிக் கொள்ளும் நிலைமையையே நாம் இன்று பர்க்கின்றோம்.
ஒற்றுமைப்பட்ட முஸ்லிம்களின் குரலினை அழித்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு சொல்ல முடியாமல் இருக்கின்ற மிகவும் துர்ப்பாக்கியமான நிலைமை முஸ்லிம் சமூகத்திற்கு எற்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கமும் சர்வதேசமும் தீர்வைப் பற்றி பேசுகின்ற போது வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான தனித்துமிக்க சமூகமான முஸ்லிம் சமூகத்தினை ஒதுக்கி விட்டு தமிழ் சமூகத்தினை பற்றி மாத்திரம் பேசுகின்ற நிலைமை தற்போது உருவாகியிருக்கின்றது.
இதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம்களிடமிருக்கின்ற ஒற்றுமின்யையும், காட்டிக்கொடுக்கின்ற நிலைமையுமாகும். அந்தளவுக்கு முஸ்லிம்களின் நிலைமை தலைகீழாக மாறிக் கொண்டிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்தில் சுய நலவாதிகளின் நிகழ்ச்சி நிரல் முஸ்லிம்களை பிளவு படுத்தி வருகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது முஸ்லிம்களுக்கிருந்த கௌரவமும் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவாதங்களும் தற்போது கைவிட்டு போகின்றதா என சிந்திக்கும் அளவுக்கு நிலைமை மாறியிருக்கின்றது. முஸ்லிம்களை பிரித்தாளும் தந்திரத்தை நல்லாட்சி அரசாங்கம் மேற் கொண்டு வருகின்றது என்றார்.