Top News

நாங்கள் அதிகப்படியான பள்ளிவாசல்களை புணரமத்தோம்; நாமல் ராஜபஷ பெருமிதம்



எமது ஆட்சிகாலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாயல்கள் பற்றி பேசுபவர்கள் நாம் வடக்கு,கிழக்கில் புணரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.பத்ரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கூட்டு எதிரணி காரியாளயத்தில் இடம்பெற்ற முஸ்லீம்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிகாலத்தில் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதாக கல்லெறியப்பட்டு தாக்கப்பட்டதாககூறுபவர்கள் நாம் வடக்கு கிழக்கில் புனரமைப்பு செய்து கொடுத்த 48 பள்ளிவாயல்கள் பற்றி வாய் திறப்பதில்லை. புதிதாக அனுமதி வழங்கிய பள்ளிவாயல் பற்றியும் புதிதாக கட்டப்பட்ட பள்ளிவாயல்கள் பற்றியும் வாய்திறப்பதில்லை.நாம் எப்போதும் முஸ்லீம்களுக்கு எதிராக செயற்படவில்லை எமது ஆட்சி காலத்தில் முஸ்லிம் மக்களை எம்மிடம் இருந்து பிரிக்க திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் இடம்பெற்றன.பொதுபலசேனா போன்ற அமைப்புகளுக்கு எமது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்து கொண்டு  சம்பிக்க போன்வர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவினார்கள்.

கண்டி நகரில் இடம்பெற்ற பொதுபல சேனாவின் முதலாவது கூட்டத்துக்கு ஹெல உருமய கட்சியே அனுமதி எடுத்துக்கொடுத்தது.அதே ஹெல உறுமய இன்று நல்லாட்சியில் பங்காளியாக உள்ளனர்.அதன் பயனாக நாம் உள்ளே அனுமதிக்காத சில குழப்பவாதிகள் இன்று அரச மரியாதையுடன் வலம் வருகிறார்கள்.இதை முஸ்லிம் மக்கள் நன்றாக புரிந்துகொள்ளவேண்டும்.இன்று தம்புள்ளை பள்ளிவாயல் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது.இன்று அந்த பள்ளிவாயலை அங்கிருந்து அப்புறப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ள முஸ்லிம் அரசியல் தரப்புகள் அன்று பள்ளிவாயலை ஒரு அங்குலமாவது அங்கிருந்து நகர்த்த முடியாது என கூறினார்கள்.அன்று தம்புள்ளை பள்ளிக்கான கண்ணீர் வடித்தவர்கள் இன்று பதவி மோகத்தில் ஒன்றுமே நடக்காதது போல இருக்கிறார்கள்.இவர்கள் தொடர்பில் முஸ்லீம் மக்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post Next Post