ஆசிரியர் சிபான் - மருதமுனை
முன்னாள் பிரதேச சபை தவிசாளர் அன்ஸில் மு.கா தலைவரை விட்டும் அகன்று அம்மணங்களை அவிழ்த்துக் கொண்டுருக்கின்றார். இது அங்கீகரிக்க கூடியதா? அல்லது அங்கீகரிக்க முடியாததா? எனும் வாதப்பிரதிவாதங்கள் இன்று போராளிகளின் வாயினுள் அவல் போட்டது போன்று அசைபோடப்படுகின்றது.
போராளி என்ற போர்வை நாங்கள் போர்த்திக்கொண்டு கட்சிக்குள் நடக்கும் கபளீகரங்களை இன்னும் இன்னும் அங்கீகரிக்கும் நிலை தொடருகின்றமையால்தான், நம்மை போன்றவர்களை மீட்டெடுக்க இறைவன் அன்ஸில் போன்றவர்களை நாடியுள்ளானோ தெரியவில்லை. காரணம் அன்ஸில் மீது போடப்பட்டிருந்த போராளி எனும் விலங்கையும் தவிசாளர் எனும் பதவியாசையையும் உடைத்தெறிந்து விட்டு வந்து கட்சிக்குள் இருந்து கொண்டே அக்கட்சியின் தலைமையின் வண்டவாளங்களைத் தண்டவாளம் ஏற்றுகின்ற தைரியமும் தாயாள குணமும் அஷ்ரப் பாசறையில் வளர்ந்த வளர்க்கப்பட்ட உண்மைத்தொண்டன் ஒருவனைத்தவிர வேறொருவருக்கும் வந்துவிட முடியாது.
நேற்றைய பாலமுனை கூட்டத்திலே அன்ஸில் சொன்ன ஒவ்வொரு விடையமும் போராளிகள் ஒவ்வொருவரும் தங்களைத்தாங்களே சுய விசாரணை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு உந்தியிருக்க வேண்டும். நமது வாக்கு பலத்தினைக் கொண்டு நாம் தெரிந்து விடுகின்ற மக்கள் பிரதினிதிகள் குடியிலும் ,கூத்திலும், கூத்தியாளுடனும் கூடி எங்கள் எண்ணங்களுக்கும் வண்ணங்களுக்கும் எதிராக முடிவுகளை எடுத்துவிட்டு வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் போது நாமெல்லாம் அதனை நம்பி விடுகின்றோமே!
இதற்காகவா மாகாணசபை? இதற்காகவாபாராளுமன்றம்? இதற்காகவா பட்டம் பதவிகள் பரிவாரம்? இதற்காகவா மாலையும் மரியாதையும்? அன்று "பாராளுமன்றத்தில் இன்று " நிகழ்ச்சியை கேட்க ஏங்கிய எங்கள் மூத்தவர்கள் இன்று எங்காவது சீடியில் முனகும் குரல் கேட்டுவிடாதா என ஏங்கும் இளையவர்கள். இதற்காகவா கட்சி ,கொள்கை ,கோட்பாடுகள்?
நாம் வாக்குப் போட்டு அனுப்பிய தலைவனே ! தலையணைபோட்டு போராளியின் தங்கையையும் அக்காளையும் அழைத்ததற்காய் ஒதிங்கினேன் என்கிறார் அன்ஸில் இதைவிடவுமா சான்று வேண்டும் போராளி? உயர்பீடக் கூட்டத்துக்கு முந்தியநாள் கோட்டலில் மாகாணசபை உறுப்பினர்கள் நாலுகால் பாய்ச்சலில் நாய்போன்று கிடந்ததற்காய் விலகினேன் என்றாரே இன்னுமா சான்று வேண்டும் போராளி? பலஸ்தீனப் பிரரேணை நிறைவேற்ற மாகாணசபையில் ஆள் இருக்கவில்லையாம்!!! உன் உள்ளத்தை உசுப்பவில்லையா முஸ்லிம் போராளி? நீ தெரிந்து விட்ட தலைவன் கஞ்சா ஏஜெண்டாம் வெட்கமில்லையா போராளி?பதினெட்டாவது திருத்தத்திற்கும் கோட்டலில் ரூமாம்!! மகிந்தரை ஆதரிக்கவும் கோட்டலில் ரூமாம்!! எங்கோ ஒரு இடத்தில் தட்டவில்லையா போராளி?
இவைகளையெல்லாம் பொறுக்காது பொங்கிஎழுந்தால் நீங்கள் பொங்கியெழுபவன் குறையைத் தேடி அலைவீர்கள். முன்னாள் தவிசாளர் சாட்டிய அவதூறுக்கும் குற்றச்சாட்டுக்கும் இன்னமும் விசாரணயே செய்யபடவில்லையாமே! குற்றவாளியைக் கூட விசாரிக்கமுடியா கட்சியாயிறே!!இவைகள் எல்லாம் உண்மையாக இருக்கும் போது அன்ஸில் அகன்று நின்று விளையாடுவது அங்கீகரிக்கவேண்டியதே!