Top News

அக்­க­ரைப்­பற்று – கல்­முனை வீதியை பட­கினால் மறித்து போராட்­டத்தில் ஈடு­பட்ட மீன­வர்கள்!


(ரீ.கே.றஹ்­மத்­துல்லா)

ஒலுவில் துறை­மு­கத்தில் பட­குகள் சென்று வரும் நுழை­வா­யிலில்   காணப்­படும் மண்னை அகற்றி  மீன­வர்­களின் பட­குகள் போக்­கு­வ­ரத்தில் ஏற்­பட்­டி­ருக்கும் தடையை  உடன் நீக்­கித்­த­ரு­மாறு கோரிகல்­முனை மாவட்ட மீனவர் சமூ­கத்­தினால்நேற்று ஒலுவில் பிர­தே­சத்தில் பாரிய கவ­ன­யீர்ப்புப் போராட்டம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இந்தப் போராட்­டத்தை கல்­முனை கரை­யோர மாவட்ட மீனவ கூட்­டு­றவுச் சங்­கங்­களின் சமாசம் மற்றும் அம்­பாறை மாவட்ட ஆழ்­கடல் இயந்­திரப் படகு உரி­மை­யா­ளர்கள் சங்கம், கல்­முனை மாவட்ட கடற்­தொழில் அமைப்பு என்­பன இணைந்து மேற்­கொண்­டி­ருந்­தன.

ஒலுவில் மீன்­பி­டித்­து­றை­முகம் முன்­பாக ஆரம்­பிக்­கப்­பட்ட இக்­க­வ­ன­யீர்ப்பு போராட்டம் அக்கரைப்பற்று- கல்முனை பிரதான வீதியின் ஒலுவில் துறைமுக வீதிச் சந்திக்குச் சென்றது.
அங்கு  பிரதான வீதியை மீன்பிடிப்படகினால் மறித்து பதாதைகள்  பெனர்களுடன் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். இதனைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால்  வீதிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 

Previous Post Next Post