ஷேக் மிசாரி அப்துல் மஜீத்
இந்த கிராம மக்கள் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சிங்கள அமைப்புக்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து நல்லாட்சியிலாவது விடிவு கிட்டுமா என எதிர்பார்த்து மைத்திரிபால சிறீசேனவுக்கு வாக்களித்தனர், அதுவும் பிரதேச அரசியல் தலைமையாக அமைச்சர் றிசாத் பதியுதீன் இன் வேண்டுகோளில்தான் வாக்களித்தனர்.
நல்லாட்சியிலும் தொடர்ந்தும் இந்த பிரதேச மக்களுக்கும் குடியேற்றத்திற்கும் எதிராக பல அமைப்புக்கள் கிளர்ந்து எழுந்தன, ஆனால் அவர்களின் கோரிக்கை ஏற்றாற்போல ஜனாதிபதியும் வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த செயற்பாடு அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு பாரிய இடியாக அமைந்திருக்கும் இத்தருவாயில் கடந்த அளுத்கம கலவரத்தின் போது அமைச்சுப்பதவிகளை துறந்துவிட போவதாக அறிக்கை மழை பொழியப்பட்டன, ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.
இந்த நல்லாட்சியில் 64 முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது, இதில் பாரியது எமது நிலங்கள் இழந்திருப்து, இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது அமைச்சர் ரிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கடும் தொனியில் உரையாற்ற வேண்டும், பதவியை இராஜினாமா செய்யமுடியும் முஸ்லிம்களுக்கு விடிவு கிடைக்காத அரசில் இருந்து என்ன பயன்? இப்படி செய்தால் முஸ்லிம்களின் தேசிய தலைவராக றிசாத் உணரப்படுவார்.