பஹத் ஏ மஜீத்
இந்த நாட்டில் முஸ்லிம்கள் நாலா பாகங்களிலும் வாழ்ந்து வந்தமைக்கான ஆதாரங்கள் ஆயிரமாயிரம் குவிந்து கிடக்கும் இந்த தருவாயில் மன்னார் மட்டும் விதிவிலக்கல்ல காரணம் மன்னார் கடல் வழிப்பாதை மூலம் இலகுவில் குடியேற வாய்ப்பாக இருந்துள்ளது.
கடல்பயணத்தில் அதிக பாண்டித்தியம் பெற்றிருந்த முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடியேறி தங்கள் வர்தகம் மற்றும் அன்றாட வாழ்கையை தொடர்ந்தனர். பலமுறை ஆங்கிலேயரும் சிலமுறை சிங்களவரும் இலங்கை முஸ்லிம்களை தீண்டினர். ஆனால் தமிழர் ஒருபோதும் தீண்டவில்லை யாரும் எதிர்பார்க்காமல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோன்றியது.
ஆரம்பத்தில் முஸ்லிம்களோடு உறவாக இருந்த புலிகள் பிற்பட்ட காலத்தில் விரோதிகளாக பார்க்க தொடங்கினர். அதன் தொடர்ச்சிதான் 1990இல் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு வடக்கிலிருந்த முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்ற பட்டனர். மன்னாரும் விதிவிலக்கல்ல தங்கள் சொந்த வாழ்விடங்களை விட்டு கைப்பையுடன் பல பிராந்தியங்களுக்கு அகதிகளாக சென்றனர்
யுத்தம் சிங்கள அரசினால் கடும் போரில் நிறுத்தப்பட்டது, வெளியேறிச் சென்ற முஸ்லிம்கள் மீள வந்து பார்த்த போது அடர்ந்த காடுகள் வளர்ந்திருந்தன. மீள குடியேற வேண்டுமாக இருந்தால் காடுகளை வெட்டவேண்டும். மறிச்சுக்கட்டியும் அப்படி ஒரு பிராந்தியம்தான் ஆனால் மறிச்சுக்கட்டி வில்பத்துவின் ஓரத்தில் இருந்து தான் தவறு. என்ன செய்வது.
காட்டை முஸ்லிம்கள் அழிக்கிறார்கள், அமைச்சர் ஒருவரும் உறுதுணையாக இருக்கிறார் என்று பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கபட்டு நீதி மன்றம் வரைக்கும் சென்றது. முஸ்லிம்கள் உருவாக்கிய நல்லாட்சி முஸ்லிம்களுக்கு பக்கபலமாக இருக்கும் என்று நம்பினர் ஆனால் வழமை போலவே சிஙடகள தேசிய வாத உணர்வை காட்டினர்.
இறுதியில் முஸ்லிம்களுக்கு முதுகில் நல்லாட்சி குத்தியது.