Top News

முஸ்லிம்களின் காணிகளை உள்ளீர்க்கவில்லை : ஜனாதிபதி அவசர அறிக்கை

வில்பத்து வன பிரகடனத்தில் முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான காணிகளோ வீடுகளோ மத தலங்களோ உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அவசர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைப்புகளும் முசலி மக்களும் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். முஸ்லிம் சிவில் அமைப்புகள் கொழும்பில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிலர் தமது அரசியல் இலாபங்களுக்காக ஜனாதிபதிக்கு எதிராக இந்த விடயத்தில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post