Top News

ஹஜ் கோட்டாவை அதிகரிக்குமாறு சவூதிக்கு அமைச்சர் ஹலீம் கடிதம்





இலங்­கையில் சுமார் 12 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக விண்­ணப்­பித்து விட்டு காத்­தி­ருக்­கின்­றனர். எனவே ஹஜ் கோட்டா தொடர்பில் இலங்கை மீது விஷேட கவனம் செலுத்­துங்கள். 

இவ் வருடம் இலங்­கைக்­கென ஒதுக்­கப்­படும் 2800 ஹஜ் கோட்­டா­வுடன் மேல­தி­க­மாக 1000 ஹஜ் கோட்­டாவை வழங்­கு­மாறு வேண்டிக் கொள்­கிறோம் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சவூதி அரே­பி­யாவின் ஹஜ் அமைச்­ச­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த வருடம் இலங்­கைக்கு மேல­திக கோட்டா வழங்­கப்­ப­ட­வில்லை என்­ப­தையும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கோட்டா மற்றும் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பாக நேரில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அமைச்சர் ஹலீம் நேரம் ஒதுக்கித் தரு­மாறு சவூதி ஹஜ் அமைச்­சரை ஏற்­க­னவே கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

ஆனால் இரண்டு கடி­தங்­க­ளுக்கும் சவூதி ஹஜ் அமைச்­ச­ரி­ட­மி­ருந்து எது­வித பதில்­களும் கிடைக்­காத நிலை­யி­லேயே மேல­தி­க­மாக 1000 ஹஜ் கோட்டா வழங்­கு­மாறு அவர் மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி வைத்­துள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து தெரி­விக்­கையில், 
'கடந்த வருடம் இறுதி சந்­தர்ப்­பத்தில் இலங்­கைக்கு மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­காமல் போய்­விட்­டது. இத­னா­லேயே இறுதி நேர முயற்­சி­களை மேற்­கொள்­ளாது இப்­போ­தி­லி­ருந்தே மேல­திக ஹஜ் கோட்­டாவை பெற்றுக் கொள்ளும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருக்­கிறோம்.

ஹஜ் கோட்டா கடந்த வருடம் போன்று உயர்­நீதிமன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் படி நேர்­முக பரீட்சை நடத்­தப்­பட்டு நிய­மனம் பெறும் ஹஜ் முக­வர்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கப்­படும். கடந்த வருடம் பின்­பற்­றப்­பட்ட நடை­மு­றையே கோட்டா பகிர்வில் பின்­பற்­றப்­படும்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலனே ஹஜ் ஏற்பாடுகளில் இம்முறையும் முதன்மைப்படுத்தப்படும். மேலதிக ஹஜ் கோட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கு அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.
Previous Post Next Post