Copy Image : டெங்கு ஒழிப்பு பணியில் உள்ள தொண்டர்கள் |
இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா
இப்படி மற்றவர்களை அவமானப்படுத்தி அதனை மீடியாக்களில் போட்டு அசிங்கப்படுத்தி அப்படி ஒரு அரசியல் செய்து தன்னை வளர்த்துக் கொள்ள நீங்கள் நினைப்பது எதற்காக .
விணாடிக்கு ஒரு முறை சத்தியம் சத்தியம் என்று சொல்லி இப்படி அசிங்கமான அரசியல் செய்ய நினைப்பவர்களால் நிச்சயமாக நிரந்தர வெற்றிபெற முடியாது.
அல்லாஹ்விடம் இனியாவது நல்ல கிதாயத் கிடைக்க துஆ செய்து நல்ல வழியில் அரசியல் செய்ய முன்வாருங்கள்...
"கிண்ணியாவில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் தன்னார்வு போராளிகள் சிரமதான பணிகளை மேற்கொண்டார்கள். இதனைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் ஐந்து பேர்கூட செய்ய வக்கில்லாத கட்சியின் கூஜாதூக்கிகள் அதனையும் விமர்சிக்கிரார்கள்.
செய்வன திருந்தச் செய்யுங்கள் இல்லை என்றால் செய்பவர்களை மனதார பாராட்டுங்கள் இது இரண்டும் இல்லாமல் விமர்சகாராக மற்றும் இருந்து விடாதீர்கள். உங்களது கேவலமான அரசியலை மனித உயிர்களுடன் விளையாடாதீர்கள்.
அவரவர் சக்திக்கு ஏற்றார்போல் அவரவர் மனிதாபிமான செயற்பாடுகளை அல்லாஹ்வுக்காக பாராட்ட பழகிகொள்ளுங்கள் எங்கள் மக்களின் உயிருடன் உங்கள் கையாலாகாத எழுத்தை எழுதி கேவலப்டுத்தாதீர்கள்.
கிண்ணியாவில் பிறந்தவன் என்ற வகையில் மிகவும் வேதனையுடன் இந்த பதிவை இடுகிறேன் உங்கள் வக்கிர அரசியல் விளையாட்டை இங்கயும் காட்ட வேண்டாம் நீங்கள் எந்த அரசியல் வாதிகளுக்காவது விசுவாசியாக இருந்திட்டு போங்கள் அதற்க்காக உதவிக்கு வருபவர்களை கொச்சை படுத்தி பொய்முகநூளில் எழுதுவதை நிறுத்திகொள்ளுங்கள் அல்லாஹ்வுக்காக