கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் விசேட திட்டத்தின் பிரகாரம் திருகோணமலை, கிண்ணியா பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான விசேட திட்டம் இன்று (15) கிண்ணியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில், டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று காலை முதல் முப்படைகளினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்புக்களுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.