அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்த சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீட் கட்சியின் உயர்பீடம் நிறைவேற்றிய சில தீர்மானங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்குமாறு தொடரப்பட்டிருந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவதை மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிவான் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புதிய செயலாளர் தெரிவு செல்லுபடியாகாதென்றும் கட்சியின் பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட உயர்பீடம் சட்டப்படி செல்லுடியற்றதென்றும் நிறைவேற்றப்பட்ட யாப்பு செல்லுபடியற்றதென்றும் இவற்றுக்கு இடைக்கால தடையுத்தரவு விதிக்கும்படி கோரி வை.எல்.எஸ். ஹமீடினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்ட்டதாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளராக எஸ். சுபைர்தீன் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.