ஜமால்தீன்
அம்பாறை - ஒலுவிலை அண்மித்த கடற்பரப்பில் கைவிடப்பட்டிருந்த, அலங்கரிக்கப்பட்ட மரத்திலான தேவாலயம் போன்று காட்சியளித்த, பாரிய தெப்பத்திலிருந்து, புத்த சிலைகள் ஆறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலில் மிதந்து கொண்டிருந்த குறித்த தெப்பத்தை, அவ்வழியாகப் பயணித்த ஒலுவில் துறைமுகக் கடற்படையினர் மீட்டதோடு, அதற்குள் புத்தரின் சீடர் ஒருவருடையது எனக் கருதப்படும் 3 அடி மதிக்கத்தக்க சிலையும் 2 அங்குலம் அளவிலான புத்தரின் சிலையொன்றையும் மீட்கப்பட்டுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட இத்தெப்பத்தின் வெளியே பௌத்த கொடிகளை ஒத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், தெப்பத்தின் உள்ளே புஜைகள் நடைபெற்றமைக்கான ஆதாரங்களும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.