ஷேக் மிஷாரி அப்துல் மஜீத்
முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெருவிருட்சத்தின் அடுத்த தலைமுறை தலைமைத்துவம் எனபது யாரும் சிந்திக்காத ஒன்று, அன்று தலைவர் அஸ்ரப் மரணித் பொழுது யார் அடுத்த தலைமை என்ற கேள்வி எழுந்தது. தங்களை தாங்களே தலைவர்கள் என்று சொல்லியும் அந்த தலைமை பதவியை கேட்டு அடம்பிடித்தும் கட்சிக்குள் பல குரல்கள் எழுந்தது. அதற்கான முழுக்காரணம் அடுத்த தலைமுறைக்கான தலைமைத்துவத்தின் இடைவெளியே.
தலைமைத்துவ பண்பை உருவாக்கும் செயலமர்வை உருவாக்கும் தேவை இன்றிருக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கு இன்றியமையாதது. ஆகவே அடுத்த தலைமுறையினை வளர்க்க வேண்டிய தேவை உணரப்படும் இந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் போக்கினை ஏற்காத முன்னாள் செயலாளர் ஹசனலி தலைமையிலான அணி களத்தில் எதிராக பகிரங்க கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் இந்த வேளை,
இந்த அணியை உருவாக்க அல்லது ஹசனலியை மேடைக்கு ஏற்ற, அதற்காக அவரை தயார்படுத்தியது யார்? தலைவர் ரவூப் ஹக்கீமையும் கட்சியின் முறையற்ற போக்கையும் எதிர்க்க திராணி கொடுத்தது யார்? பேராளர் மாநாட்டிற்கு முதல்நாள் போராளர் மாநாட்டை எதிர்க்க திட்டம் தீட்டியது யார்? என் பல கேள்விகளுக்கு ஒரே விடை சட்டத்தரணி அன்சில். அண்மையில் ஹசனலியின் முதலாவது எதிர்ப்பு கூட்டத்தில் காரசாரமாக அழகாக முறையாக அன்சில் உரையாற்றியிருந்தார். கூடவே தாஹிர், தாஜூதீன் ஆகியோரும் உரையாற்றினர்.
பேராளர் மாநாட்டிற்கு முதல்நாள், திட்டம் ஒன்று தீட்டப்பட்டது அதிகாலை சுபஹ் தொழுத பின்னர் தலைவரின் அடக்கஸ்தலத்திற்கு சென்று துஆ பிரார்த்தனை செய்துவிட்டு பேராளர் மநாட்டை ஹசனலி தலைமையில் எதிர்ப்பது குறித்தும் - கட்சி தலைவரின் கடும்போக்கை எதிர்ப்பது குறிததும் ஊடகங்களுக்கு அறிவிப்பது மக்களுக்கு தெளிவு படுத்துவது என்று ஆனால் அன்று ஹசனலி சற்று பயந்து போனார். ஆனால் அன்சில் இறுதிவரை அதே நிலைப்பாட்டிலே இருந்தார். சில நாட்களுக்கு பிறகு ஹசனலி மனம் மாறினார். பகிரங்க கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
இங்கு ஒன்று கவனிக்க படவேண்டியது அதிகார வர்க்கத்தை எதிர்க்கும் அடிப்படை போராளி பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் ஆசைப்படாமல் வாகனங்கள் மீது பிரியம் கொள்ளாது கட்சிக்காகவும் முஸ்லிம் என்ற ஓரே ஒரு காரணத்திற்காவும் பாடுபட எண்ணியிருப்பது அவனின் தலைமைப்பண்பை எடுத்து காட்டுகிறது. எப்படி பார்ப்பினும் அன்சிலுக்கு எதிர்காலம் உண்டு.